தேசிய தரவரிசைப் பட்டியலில் 25-ஆம் இடத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 20, 2019

தேசிய தரவரிசைப் பட்டியலில் 25-ஆம் இடத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக தரவரிசைப் பட்டியலில், நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 25-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது என பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்தார். நாகையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி : நாகையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012-ஆம் ஆண்டில் ஓர் உறுப்புக் கல்லூரியுடன் தொடங்கப்பட்டது. தற்போது, இந்தப் பல்கலைக்கழகம் 10 உறுப்புக் கல்லூரிகளையும், 8 பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என சுமார் 40 வகையான பாடத் திட்டங்களுடன் செயல்படுகிறது. இந்தியாவில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக அங்கீகாரத்துடன் செயல்படும் வேளாண்மை சார்ந்த 72 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக உள்ள நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள மாநில வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் 25- ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் கூட இந்தப் பட்டியலில் உள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மீன்வளப் பல்கலைக்கழகம் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் 25-ஆம் இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் தகுதி, ஆசிரியர் - மாணவர் விகிதம், முனைவர் பட்டம் பெறுவோரின் விகிதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப் பட்டியலிடப்படுகிறது. அந்த வகையில், மீன்வளப் பல்கலைக்கழகம் தரவரிசைப் பட்டியலில் 25-ஆம் இடத்தைப் பெற்றதற்கு அரசு அளித்து வரும் ஊக்கம் ஒரு முக்கிய காரணமாகும். மீன்வளப் பல்கலைக்கழகம் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றுடன் விரிவாக்கம் மூலம் ஆராய்ச்சியின் பயனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியையும் மேற்கொள்கிறது. மீன்வளப் பல்கலைக்கழகம் சுமார் 70 முதல் 75-க்கும் அதிகமான ஆராய்ச்சிகளை விரிவாக்கம் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார் சுக. பெலிக்ஸ்.
வேலைவாய்ப்பு உறுதி... மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் குறித்து கேட்ட போது, துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் கூறியதாவது : மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம் மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்பை பயின்ற 20 மாணவர்களில், 12 பேர் மேல்படிப்பை தொடர்கின்றனர். 5 பேர் வளாக நேர்காணல் மூலம் பணி வாய்ப்புப் பெற்றுள்ளனர். மேல்படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு மீன்வளப் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மீன்வளத் துறைக்குத் தேவையான பொறியாளர்கள் பணிக்கு மீன்வளப் பொறியியல் படிப்பை நிறைவு செய்த மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு வலியுறுத்தப்பட்டு, அதன்படி மீன்வளப் பொறியியல் தகுதியை இணைத்து மறு விளம்பரம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது என்றார் சுக. பெலிக்ஸ்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews