G20 ஏன்.? எதற்கு..? எப்படி..? ஒரு விரிவான பார்வை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

G20 ஏன்.? எதற்கு..? எப்படி..? ஒரு விரிவான பார்வை..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் G20 மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. இந்த G20 என்றால் என்ன..? இவர்களுக்கு என்ன வேலை. ஏன் G20 மாநாடு பத்திரிகைகளில் எப்போதும் தலைப்புச் செய்திகள் ஆகின்றன..? அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற G8 நாடுகள் இந்த G20-ல் வந்து விடுகிறார்கள். அவர்களோடு அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி ஆகிய 12 வளரும் நாடுகள் சேர்த்து மொத்தம் 20 நாடுகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். என்ன அடிப்படை உலகின் டாப் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G20. ஒவ்வொரு ஆண்டும் இந்த டாப் 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். இந்த 20 நாடுகளின் பொருளாதாரம் தான் ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்துக்கு சமமாக இருக்கும். இப்போதே பாருங்களேன் உலகின் மொத்த ஜிடிபியில், 85 சதவிகித ஜிடிபி இந்த 20 நாடுகளுக்குச் சொந்தமானது. உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகித மக்கள் இந்த 20 நாட்டைச் சேர்ந்தவர்கள்.
விருந்தாளியாக அழைக்கலாம் இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்தில், ஒரே நாடே நடத்தாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான அனைத்து G20 சந்திப்புகளை நடத்த வேண்டும். இந்த தலைவர் நாடு நினைத்தால் G20-ல் உறுப்பினராக இல்லாத நாடுகளைக் கூட விருந்தாளிகளாக அழைக்கலாம். உதாரணமாக எல்லா G20 மாநாட்டிலும் ஸ்பெயின் அழைக்கப்படுவதைச் சொல்லலாம். முதல் மாநாடு கிழக்காசிய நாடுகளில் அப்போது ஒரு பெரிய நிதி நெருக்கடி இருந்தது. அது உலகம் முழுக்க பரவி ஒரு சிறிய பொருளாதார சுணக்கத்தை உண்டாக்கியது. அதனால் முதல் G20 மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1999-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த G20 மாநாடு ஒரு G8 நாடுகளின் விரிவாக்கம் என்று கூட சொல்லலாம். உலகின் வளர்ந்த பணக்கார நாடுகள், உலகின் வளரும் டாப் பொருளாதாரம் கொண்டு நாடுகளான சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளையும் சேர்த்து உருவாக்கியது தான் இந்த G20. பங்கேற்பவர்கள் தொடக்கத்தில் இந்த G20 மாநாடுகளில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் தான் சந்தித்தார்கள். ஆனால் 2008 பொருளாதார சரிவுக்குப் பின் G20 உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் என அனைத்து பெரிய தலக் கட்டுகளும் சேர்ந்து சந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
என்ன பேசுவார்கள் எல்லா G20 உறுப்பு நாடுகளும் தங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விஷயங்களைப் பேசுவார்களாம். அதோடு உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பெரிய திட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவையும் கேட்பார்களாம். இந்த ஆண்டில் தீப்பற்றி எரியும் வர்த்தகப் போர், கால நிலை மாற்றங்கள், ஈரான் உடனான உறவு போன்றவைகள் விவாதிக்கும் ஹாட் டாப்பிக்காக இருக்கும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக உலகப் பொருளாதாரமும் முக்கிய டாப்பிக்காக இருக்கும். தனிப்பட்ட சந்திப்பு இதெல்லாம் போக இரண்டு நாடுகளுக்கு இடையிலான தனிப்பட்ட பேச்சு வார்த்தைகளும் நடக்குமாம். இந்த வருடமே ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தனியாக பேசப் போகிறார். அதே போல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தனியாகப் பேசப் போகிறார். இங்கே உலகின் சில முக்கியமான முடிவுகள் கூட எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 2009-ம் ஆண்டு G20 மாநாட்டில், ஐந்து லட்சம் கோடி டாலரை பணத்தை உலக பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடப் போவதாக ஒரு பெரிய முடிவு எடுத்தார்கள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உலக பொருளாதாரம் 2008 சரிவில் இருந்து மீண்டு வந்தது.
வெற்றியா..? உலகின் 65% மக்கள் தொகை, 85 % ஜிடிபி எல்லாம் ஒரு பக்கம் இருக்க, பெருவாரியான நாடுகள் இதில் இல்லை என்பது தான் வருத்தம். வெறும் 20 உறுப்பினர்கள் என்பதால் முடிவுகள் கொஞ்சம் வேகமாக எடுக்க முடியும் அவ்வளவு தான். இந்த G20 கூட்டத்தில் வழக்கமாக ஐநா-வில் வழங்குவது போல வாக்களிக்கும் உரிமை எல்லாம் கிடையாது. அதே போல G20 போடும் ஒப்பந்தங்களும் சட்டப் படி பெரிதாக செல்லுபடி ஆகாதாம். ஆனால் இந்த G20 மாநாட்டை ஒட்டி பெரிய போராட்டங்கள் எல்லாம் நடக்கும். 2009-ல் லண்டனில் நடந்த G20 மாநாட்டில் இயான் டாமில்சன் என்கிற செய்தித் தாள் வியாபாரி கொல்லப்பட்டார். அவருக்காக அர்ஜென்டீனாவில் ஆயிரக்கணக்காணோர் போராட்டத்தில் குதித்தனர். இப்படி சர்ச்சைகளுக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லாத, இதில் போடும் ஒப்பந்தங்கள் அத்தனை வலுவில்லாத கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews