👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

சான்பிரான்சிஸ்கோ: எங்கள் நிறுவன கண்டுபிடிப்பான மைக்ரோசாஃப்ட் மென்பொருளில் அளவுக்கு அதிகமாக கவனம் செலுத்தி, ஸ்மார்ட் ஃபோன்களின் இயங்குதளமான ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் போதிய கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டதே நான் என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்று பில்கேட்ஸ் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மொபைல்ஃபோன் சந்தையில் ஆண்ட்ராய்ட் இயங்குதள தொழில்நுட்பத்தின் அசுரவேக வளர்ச்சிக்கு முன்னால் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பம் காணாமல் போனது என்று சொன்னால் கூட அது மிகையாகாது. தற்போதைய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் மொபைல்ஃபோன் மென்பொருளான ஆண்ட்ராய்ட் இயங்குதளமானது 85 சதவிகித பங்களிப்போடு முன்னணியில் உள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தின் அசுரவேக வளர்ச்சியின் காரணமாக ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் பயன்பாடே அதிக அளவில் உள்ளது. அதோடு தற்போதைய சர்வதேச மென்பொருள் சந்தையில் கூகுள் தேடுதளத்தின் மென்பொருளான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் சுமார் 85 சதவிகித பங்களிப்போடு முன்னணியில் உள்ளது. இதுவும் எங்களின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும் என்று மனம் திறந்து பேசினார்.
ஆப்பிள் ஐஃபோனை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்ற முனைப்பிலேயே இருந்த நான் எங்கள் நிறுவனத்தின் மைக்ரோசாஃப்ட் மென்பொருளில் கவனம் செலுத்திய நான், வேகமாக வளர்ந்து வந்த ஆண்ட்ராய்ட் என்னும் அசுரனின் சிறப்பம்சத்தை கவனிக்கத் தவறிவிட்டேன். இது தான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறாகும் என்று பில்கேட்ஸ் வருத்தத்துடன் தெரிவித்தார்
ரோல் மாடல்
பில்கேட்ஸ்... இன்றைக்கு வாழ்க்கையில் உழைத்து முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் முன்னோடியாக, ஆதர்ஸன வழிகாட்டியாக ரோல் மாடலாகவும் உள்ளார் என்பது எல்லோரும் அறிந்தே. உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளதோடு பெரும் கொடையாளராகவும் இருக்கிறார். தன்னுடைய சொத்துக்களில் பெரும்பகுதியை நன்கொடையாக அளித்து அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
காதுல பூ
பில்கேட்ஸைப் பற்றி வேடிக்கையாக ஒரு விசயத்தை சொல்வதும் உண்டு. இவர் நடந்து போகும்போது தப்பித்தவறி இவருடைய பாக்கெட்டிலிருந்து பணம் விழுந்தால் கூட அதை குனிந்து எடுக்கமாட்டாராம். அந்த பணத்தை குனிந்து எடுக்கும் நேரத்தில் அதை விட பலமடங்கு டாலர் வருமானம் அவருக்கு கிடைக்கும் என்று காதில் பூ சுற்றும் சம்பவமும் நடப்பதுண்டு.
எல்லாப் புகழும் பில் கேட்ஸுக்கே
கடந்த நூற்றாண்டில் இறுதிக்கட்டமான 1990களில் பிரபலமாகிக் கொண்டிருந்த கணினிகளை உலகமெங்கும் கொண்டுசேர்த்த பெருமை பில்கேட்ஸையே சேரும். ஒரு சாதாரண கணினியாக இருந்ததை மைக்ரோகாஃப்ட் என்னும் மென்பொருளை புகுத்தி, இன்றைக்கு அந்த மைக்ரோசாஃப்ட் மென்பொருள் இல்லை என்றால் கணினியே இல்லை என்ற அளவுக்கு கணினி இயக்கமுறையில் (Computer Operating system) பெரும் பகுதி சந்தையை தன் கையில் வைத்துள்ளார்.
எதையும் சாதிக்க முடியலெ
இத்தகைய பெரும் சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள பில்கேட்ஸுக்கு, உலகத்தையே தன்னுள் கொண்டிருக்கும் சாத்தானான ஸ்மார்ட் ஃபோன் மென்பொருள் துறையில் எதையுமே சாதிக்க முடியவில்லை என்ற பெரும் ஆதங்கமும் ஏக்கமும் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பது அவருடைய பெருந்தன்மையையும் வெளிப்படைத் தன்மையைமே காட்டுகிறது.
தப்பு பண்ணிட்டேனே
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவனமான வில்லேஜ் குளோபல் என்ற அமைப்பு நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு எங்கள் சொந்த தயாரிப்பான மைக்ரோசாஃப்ட் மென்பொருளுக்கு காட்டிய அக்கறையை ஆண்ட்ராய்ட் இயங்குதள தொழில்நுட்பத்துறையில் காட்டாமல் கோட்டை விட்டதே நான் செய்த மிகப்பெரிய தவறு என்று வெளிப்படையாக கூறினார்.
அலட்சியமே காரணம்
மென்பொருள் சந்தையைப் பொறுத்தவரையில், வெற்றியாளரே சந்தையின் போக்கை தீர்மானிப்பதோடு முழு ஆதிக்கமும் செலுத்தக்கூடியவராக உள்ளார். கூகுள் தேடுதளத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அருமையான சாதகமான சூழல் உருவாவதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அப்போது நான் மேற்கொண்ட அலட்சியமான நிர்வாகத் திறமையே காரணம் என்றார்.
ஆப்பிள் ஐஃபோன் வெளியீடு
கடந்த 2005ஆம் ஆண்டில் தான் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தை வாங்கியது. அதை வாங்கிய போது கூகுள் நிறுவனத்திடம் பெரிதாக எந்தவொரு திட்டமும் இல்லை. அப்போதுதான் செல்ஃபோன்களின் வரவு சற்று அதிகரிக்கத் தொடங்கிய காலம். 2007ஆம் ஆண்டில் தான் ஸ்மார்ட்ஃபோன் எனப்படும் ஐஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இதனால் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
ஒரு கை பாக்கலாமா
இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டு ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் களம் இறங்கியதால், நாமும் இறங்கி மொபைல் ஃபோன் சந்தையையும் ஒரு கை பார்ப்போமே என்ற நினைப்பில், பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் தயாரானார். மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் மொபைல்ஃபோன்களுக்கான விண்டோஸ் இயங்குதளத்தை உருவாக்கியது. அதோடு கணினி மென்பொருள் சந்தையிலேயே நாம் ஒரு கலக்க கலக்கிவிட்டோம், இதென்ன ஜூஜூபி, மொபைல்ஃபோன் சந்தையும் விரைவில் நம் வசம் வந்துவிடும் என்ற மமதையில் இருந்துவிட்டார்.
விண்டோஸ் இயங்குதளம்
அந்த நினைப்பிலேயே கையோடு அப்போது பிரபலமான மொபைல்ஃபோன் நிறுவனமான நோக்கியா நிறுவனத்துடன் தங்களுடைய விண்டோஸ் இயங்குதளத்தை (Windows operating system) பயன்படுத்த ஒப்பந்தம் செய்தது. மொபைல்ஃபோன் அறிமுகமான காலத்திலிருந்து முடிசூடா மன்னனாக இருந்த நோக்கியாவும், மென்பொருள் துறையில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மைக்ரோசாஃப்டும் இணைந்தது மொபைல்ஃபோன் சந்தையில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
காணாமல் போன மைக்ரோசாஃப்ட்
மொபைல்ஃபோன் சந்தையில் ஆண்ட்ராய்ட் இயங்குதள தொழில்நுட்பத்தின் அசுரவேக வளர்ச்சிக்கு முன்னால் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பம் காணாமல் போனது என்று சொன்னால் கூட அது மிகையாகாது. தற்போதைய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் மொபைல்ஃபோன் மென்பொருளான ஆண்ட்ராய்ட் இயங்குதளமானது 85 சதவிகித பங்களிப்போடு முன்னணியில் உள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட முன்னணி மொபைல்ஃபோனாக வலம்வந்த நோக்கியா நிறுவனம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
ஆண்ட்ராய்டின் அசுர வளர்ச்சி
இதற்கு முக்கிய காரணம், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் வளர்ச்சிதான். முதல் ஆண்ட்ராய்ட் மொபைல்ஃபோன் அறிமுகமாகி சுமார் 10 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அது அசுர வளர்ச்சியோடு தன் போட்டியாளர்களை எல்லாம் ஒதுங்கி நிற்கவைத்துவிட்டது. கூகுள் நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்தே ஆண்ட்ராய்ட் இயங்குதள மென்பொருள் தான் என்று பில்கேட்ஸே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆண்ட்ராய்டின் சிறப்பம்சம்
ஆப்பிள் ஐஃபோனை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்ற முனைப்பிலேயே இருந்த நான் எங்கள் நிறுவனத்தின் மைக்ரோசாஃப்ட் மென்பொருளில் கவனம் செலுத்திய நான், வேகமாக வளர்ந்து வந்த ஆண்ட்ராய்ட் என்னும் அசுரனின் சிறப்பம்சத்தை கவனிக்கத் தவறிவிட்டேன். இது தான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறாகும் என்று பில்கேட்ஸ் வருத்தத்துடன் தெரிவித்தார். மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து பில்கேட்ஸ் பதவி விலகியதை அடுத்து அந்த பொறுப்பை இந்தியாவின் சத்ய நாதெல்லா ஏற்று நிர்வகித்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U