படிகளில் தொங்கி செல்லும் மாணவர்கள்... கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 08, 2019

படிகளில் தொங்கி செல்லும் மாணவர்கள்... கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விருதுநகரில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கின்றனர். விருதுநகர் கோட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் 2 என 8 கிளைகள் உள்ளன. இவற்றில் இருந்து இயக்கப்படும் டவுன்பஸ்கள் அனைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பழமையானவை.
தற்போது ஒவ்வொரு கோட்டத்திற்கும் வழங்கப்பட்ட 10 முதல் 20 பஸ்களும் நீண்டதூர பஸ்களாக இயக்கப்படுகின்றன. இயக்கப்படும் டவுன்பஸ்கள் அனைத்தும் கண்டமான நிலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. கிராமப்புறங்களுக்கான பஸ்சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய பஸ்கள் இல்லை. எனவே மாணவர்கள் வேறு வழியின்றி படிகளில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
விருதுநகரில் இருந்து காடனேரிக்கு இயக்கப்படும் பஸ்சின் பின்புற படிக்கட்டு பிய்ந்து தொங்கிய நிலையில் உள்ளது. இதில் 5 மாணவர்கள் வரை தினசரி காலை, மாலை நேரங்களில் தொங்கி செல்கின்றனர். பஸ் ஓடும் போது படிக்கட்டு பாரம் தாங்காமல் உடைந்து விழுந்தால் மாணவர்களின் கதி படு மோசமாக இருக்கும். விபத்து ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பள்ளிக்கல்வித் துறை, போலீசார் என அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகும். விபத்து ஏற்படும் முன்பாக உரிய நடவடிக்கை எடுத்து புதிய டவுன்பஸ்கள் விட வேண்டும். இல்லை பஸ்களின் பழுதை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews