தத்தெடுக்க ஆளின்றித் தவிக்கும் பரிதாப அரசுப்பள்ளி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 01, 2019

தத்தெடுக்க ஆளின்றித் தவிக்கும் பரிதாப அரசுப்பள்ளி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தையே உலுக்கி எடுத்த கஜா கோரப்புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பரிதாப நிலையைத்தான் நீங்கள் பார்த்து வருகிறீர்கள்.
குறைந்து வரும் மாணவர்கள் எண்ணிக்கை காரணமாக மூடப்படும் நிலையிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் காணப்படும் அடிப்படை வசதிகள் கூட இந்தப் பள்ளியில் இல்லாத அவலநிலை உள்ளது. நல்ல காற்றோட்டமிக்க கட்டிட வசதிகள், சுகாதாரமான குடிநீர் வசதிகள், பதின்பருவ வயதுடைய பெண் பிள்ளைகளுக்கான கழிப்பறை வசதிகள், நீர்நிலைக்கு அருகில் பள்ளி அமைந்திருந்தாலும் போதிய பாதுகாப்பை வழங்கும் சுற்றுச்சுவர் வசதிகள், பாழ்பட்டுக் கிடக்கும் வகுப்பறை வசதிகள், கணிணி வசதிகள் என எந்தவொரு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கப் பெறாத, கோரிக்கைகள் கேட்பாரற்ற நிலையிலேயே இந்த பள்ளியின் நிலையுள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அண்மையில் விடுத்திருக்கும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு அரசுப்பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தின் அன்பான வேண்டுகோளை ஏற்று நல்ல மனம் படைத்தோர்கள் மற்றும் கல்விப் புரவலர்கள் முதலாவதாகவும் முதன்மையானதாகவும் தேர்வு செய்யப்பட வேண்டிய பள்ளிகளுள் இப்பள்ளியும் ஒன்று.
ஆசிரியப் பெருமக்கள் இதுகுறித்து தட்டாத கதவுகள் இல்லை. இதுநாள்வரையிலும் ஏழை, எளிய, 90 விழுக்காட்டிற்குமேல் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் நல்வாழ்விற்கு ஒரு கதவும் திறக்கப்படாதது வேதனையே! யார் அந்த மீட்பர்? ஏங்கித் தவிக்கிறது...இந்த பரிதாபப் பள்ளியும், பாவப்பட்ட ஏழை எளிய வீட்டுக் குழந்தைகளும், செய்வதறியாது நம்பிக்கையோடு நிற்கும் பள்ளி ஆசிரிய சமூகமும், வாழ்க்கைக்கும் வயிற்றுக்கும் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களும், பேருதவிகளை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஊர் பொதுமக்களும்!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews