எடப்பாடியுடன் மோதலால் சேலம் கலெக்டர் தூக்கியடிப்பு : பரபரப்பு தகவல்கள் அம்பலம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

எடப்பாடியுடன் மோதலால் சேலம் கலெக்டர் தூக்கியடிப்பு : பரபரப்பு தகவல்கள் அம்பலம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் ெவளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தின் 171வது கலெக்டராக ேராகிணி, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். சேலத்தின் முதல் ெபண் கலெக்டர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது. 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக பணியை துவக்கினார். இதையடுத்து பல்வேறு இடங்களில் பணியாற்றிய ரோகிணி, 2017ம் ஆண்டு, சேலம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவரது கணவர் விஜயேந்திரபிதாரி மத்திய புலனாய்வுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளிகளை அரவணைப்பது, பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் சென்று குழந்ைதகளுக்கு பாடம் நடத்துவது, தரையில் அமர்ந்து சத்துணவு சாப்பிடுவது, திடீர் ஆய்வுகள் நடத்தி அபராதம் விதிப்பது, சாலையில் தவிக்கும் முதியவர்களிடம் வலியச்சென்று பேசி நலம் விசாரிப்பது என்று எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு லைவில் இருப்பவர் கலெக்டர் ரோகிணி. இது பலரது பாராட்டுகளுக்கும், சிலரது கேலிகளுக்கும் ஆளானது. ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வலம் வந்தார் கலெக்டர் ரோகிணி. இப்படிப்பட்ட நிலையில் அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு ேகள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கொடுத்த பிரஷரே காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அரசுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கலெக்டராக பொறுப்பு ஏற்றது முதல், ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே கலெக்டர் செயல்பட்டு வந்தார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு, அவரது அணுகுமுறைகள் சற்று மாறியது. தேர்தல் தோல்விக்கு தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் சரியாக சென்று சேராதது ஒரு முக்கிய காரணம் என்று அதிமுகவினர் பேசிவந்தனர். எப்படியாவது முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக ஜெயிக்கும் என்று கட்சியினர் உறுதியாக நம்பினர். ஆனால் தோல்வியை சந்தித்தது. இது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர், தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட அளவுக்கு அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தவில்லை. மேலும் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் விடுக்கும் சில முக்கிய பரிந்துரைகளை கண்டு ெகாள்வதில்லை. அதே போல் குடிநீர் பிரச்னையை போக்குவதிலும் போதிய முனைப்பு காட்டவில்லை என்று புகார் ெதரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழக அரசின் திட்டங்களை விட, மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இங்குள்ள வடமாநிலத்தவர்கள் சிலரின் கோரிக்கைகள் உடனுக்குடன் ஏற்கப்படுகிறது என்பது போன்ற புகார்களை தெரிவித்துள்ளனர்.
அதோடு தேர்தல் நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரத்தில் அதிக அளவு வாகனங்கள் சென்றுள்ளன. இது குறித்து புகார் எழுந்ததும், எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட பெண் எஸ்பிக்கு கலெக்டர் ரோகிணி கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் எந்த எஸ்பியோ, நடவடிக்கை எடுக்காமல், அந்த புகார் கடிதத்தை நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் காண்பித்துள்ளார். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டு, சேலத்துக்கு புதிதாக வந்த பெண் அதிகாரி நமக்கு பயந்து புகார் கடிதத்தை நேரடியாக நம்மிடம் காட்டுகிறார். ஆனால் கலெக்டரோ, துணிச்சலாக என் மீதே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாரே என்று முதல்வர் கூறியதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சேலம் கோட்டை மைதானத்துக்கு வந்தார். அப்போது கோட்டை மைதானத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ள திருவாகவுண்டனூர் வரை அ.தி.மு.க கொடிக் கம்பங்கள் கட்டப்பட்டிருந்தன. அதையடுத்து தி.மு.க-வினர் மாவட்டத் தேர்தல் அதிகாரியான கலெக்டர் ரோகிணியிடம் புகார் தெரிவித்தனர். உடனே கலெக்டர் ரோகிணி அந்தக் கொடிக் கம்பங்களை அகற்றச் சொல்லி உத்தரவிட்டார். இது முதல்வர் தரப்பைக் கோபப்படுத்தியது. இதனால்தான், ரோகினியை முதல்வர் எடப்பாடி அதிரடியாக மாற்றி டம்மியான இசைக்கல்லூரி பதிவாளராக மாற்றிவிட்டுள்ளார்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews