மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ,... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்? கல்வியாளர் வழிகாட்டல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ,... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்? கல்வியாளர் வழிகாட்டல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
`தமிழகத்தில் ஏராளமான மெட்ரிக் பள்ளிகள் இருக்கின்றன. பல பள்ளிகள் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. உண்மையில் எந்தப் பாடத்திட்டம் சிறந்தது, மெட்ரிக்கா, சி.பி.எஸ்.இ-யா?" இந்தக் கேள்வியை அநேகப் பெற்றோர்கள் எதிர்கொண்டிருப்பார்கள். பள்ளி அட்மிஷனின்போதும் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பற்றிப் பேசிக்கொள்வார்களே தவிர, இரண்டு முறைகளைப் பற்றிய விவரம் தெரிந்திருப்போர் சொற்பமே. எனவே, மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எ.ஸ்.இ இவற்றைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் இரண்டில் எதில் படித்தால், மாணவரின் எதிர்காலத்திற்குச் சிறந்தது என்று, கல்வியாளர் கே.ஆர். மாலதியிடம் கேட்டோம். "பிள்ளைகள் படிக்கும் பாட முறையைப் பற்றிப் பெற்றோர்கள் தெரிந்துகொள்வது நல்ல விஷயம்தான். அப்போதுதான் அவர்களின் படிப்புக்கு உதவுவதோடு, உயர்கல்விக்கு சரியாகத் திட்டமிடவும் முடியும்.
மெட்ரிகுலேஷன் மெட்ரிகுலேஷன் முறையில், பயிற்றுமொழி ஆங்கிலம். அதிகபட்சமாக 14 பாடங்கள் வரை நடத்தப்பட்டன. மேலும் தமிழ் மற்றும் விருப்பப்படமாக மூன்றாவதாக ஒரு மொழி கற்பிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் 5 பாடங்கள் மட்டுமே இருப்பதால், ஒரே விதமான சமத்துவமான கல்வியை எல்லோருக்கும் அளிக்க வேண்டும் என அரசு முடிவெடுத்தது. அதனால், 2009-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட, சமச்சீர் பாடத்திட்ட முறைக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் உட்படுத்தப்பட்டன. அதாவது, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் இவைதாம் அங்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனால், அவை பயிற்றுமொழி ஆங்கிலமாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி பயிற்று மொழி பள்ளிகள் இருந்தாலும் அவை எண்ணிக்கையில் மிகவும் குறைவுதான். இயல்பாகவே பெற்றோர்களுக்கு ஆங்கிலம் மீதான ஈர்ப்பால் மெட்ரிகுலேஷன் பள்ளியை நோக்கிச் செல்கின்றனர்.
சி.பி.எஸ்.இ (Central Board of Secondary Education) 1950களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹை ஸ்கூல் போர்டு ஒன்று இருந்தது. அதைத்தான் 1956-ம் ஆண்டு, சி.பி.எஸ்.இ என்று மாற்றப்பட்டது. இது உருவானதற்கு முக்கியக் காரணம், மத்திய அரசு ஊழியர்கள் பணிமாறுதலால் இந்தியாவின் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதனால், அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது. எனவே, இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பாடத்திட்டம் உள்ள பள்ளியை உருவாக்கினார்கள். தொடக்கத்தில் ராணுவப் பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகள்தாம் இருந்தன. பின்னாளில் இதில் தனியாரும் நுழைய சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சி.பி.எஸ்.இ பள்ளிகளில், பயிற்றுமொழி ஆங்கிலம். கூடுதலாக இந்தி மொழியும் கற்றுத்தரப்படும். ஏனெனில், மத்திய அரசுப் பணியாளர்களின் இடமாறுதல் காரணத்தினால், மாணவர்களுக்கு அதுவே உதவும் என நினைத்ததால் அந்த முடிவு எடுத்தனர். கடந்த 15 ஆண்டுகளாக, தனியாரும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் நடத்த வந்ததால், இந்தியுடன் கூடுதலாக இன்னோர் இந்தியமொழியைக் கற்றுத்தர அனுமதி அளித்தது. எனவே, அவர்களின் பிராந்திய மொழியையும் கூடுதலாகக் கற்றுத்தர முடிவெடுத்தனர். தமிழகத்தில் தமிழ், கர்நாடகாவின் கன்னடம் என்பதாக. இதனால், மும்மொழிக் கல்வியாக மாறிவிட்டது. இந்தியா முழுக்க 19,000 பள்ளிகளும், உலகம் முழுவதும் 25 நாடுகளிலும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. தனியார் நுழைந்தது ஏன்? தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் பெறப்படும் கட்டணத்தை முறைப்படுத்த, 2009-ம் ஆண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஒரு பள்ளி மாணவர்களிடம் இவ்வளவுதான் கட்டணம் வாங்கவேண்டும் என்று நிர்ணயம் செய்தது. இதனால் பலரும் சி.பி.எஸ்.இ பள்ளியைத் தொடங்கினார்கள். ஏனெனில், இந்தக் கட்டண நிர்ணயம் சி.பி.எஸ்.இ பள்ளிகளைக் கட்டுப்படுத்தாது என்பதுதான். இதனால் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பலவும் தங்கள் பள்ளிகளை சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றம் செய்தன. அதிக செலவு செய்துபடிக்கும் படிப்பே சிறந்ததாக இருக்கும் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் இருப்பதால் சி.பி.எஸ்.இ பள்ளிகளை நோக்கிச் சென்றனர்.
மெட்ரிகுலேஷன் - சி.பி.எஸ்.இ என்ன வித்தியாசம்! எந்த முறை பள்ளிகள் என்றாலும் பாடத்திட்டம் உருவாக்கப்படுவது, நேஷனல் கரிக்குலம் ஃப்ரேம்வொர்க் 2005 (National Curriculum Framework (NCF 2005) வழிகாட்டலின் படிதான். அதாவது 6 வயது மாணவருக்கு எந்த அளவில் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும், இதுவரைதான் அறிவியல் பகுதிகள் அமைய வேண்டும் உள்ளிட்ட விஷயங்களை வரையறுப்பது NCF 2005 தான். அறிவியல், கணக்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் பெரிய மாற்றம் இருக்காது. ஏனெனில் நியுட்டன் மூன்றாவது விதி எந்தப் பாடத்திட்டமாக இருந்தாலும் ஒன்றுதானே! ஆனால், வரலாறு பாடத்தில் மாநிலக் கல்வி எனும்போது பிராந்திய தன்மை அதிகமாகவும், சி.பி.எஸ்.இ எனும்போது இந்திய அளவில் எனும் பார்வையுடனும் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டும் எங்கு வித்தியாசப்படுகிறது என்றால், மாணவர்களை மதிப்பிடும் முறையில்தான். சி.பி.எஸ்.இ முறையில் மாணவர்களின் மனப்பாடம் செய்யும் முறையைக் கொண்டது அல்ல. ஒட்டுமொத்த பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அதற்கு ஏற்ற கற்பித்தல் முறையை முதலாம் வகுப்பிலிருந்தே சி.பி.எஸ்.இ பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மெட்ரிகுலேஷன், மாநிலப் பாடத்திட்டங்களில் மனப்பாட முறைக்கே அதிக முக்கியத்தும் அளிக்கப்பட்டது. அதனால்தான் இங்கு படித்த மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லும்போது சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஆனால், மனப்பாட முறையில், தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது ஆரோக்கியமானது.
இரண்டில் எது சிறந்தது? கல்வியைப் பொறுத்தவரை பாடங்கள் எல்லாமும் நேஷனல் கரிக்குலம் ஃப்ரேம்வொர்க் வழிகாட்டலில்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால், சி.பி.எஸ்.இ பாடங்கள் நுழைவுத்தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. JEE உள்ளிட்ட தேர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, சி.பி.எஸ்.இயில் கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்படுகிறது. மாநிலப் பாடத்திட்டத்தில் எல்லாப் பாடங்களும் ஒரே மாதிரியாகப் பார்க்கப்பட்டன. சமீபத்தில்தான் நுழைவுத்தேர்வுகளை மனத்தில் கொண்டு மாற்றங்கள் நடந்திருக்கின்றன. நம்முடைய பாடத்திட்டங்களில் படித்த பலரும் மருத்துவப் படிப்புக்கும் பொறியியலுக்கும் ஐஐடிக்கும் சென்றனர். நுழைவுத்தேர்வு என்பது அவசியமாகும்போது மாணவர்கள் மனப்பாட முறையிலிருந்து மாற வேண்டியிருக்கிறது. எனவே, இதுதான் சிறந்தது அது சிறந்தது அல்ல என்று சொல்லமுடியாது. ஒரு மாணவருக்கு ஏற்றது என்பதை அறிந்துகொள்வதே அவசியம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews