காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 12, 2019

காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதால், காலியிடங்களை நிரப்ப வேண்டும்' என, அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் கோரி வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது:தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில், கண் மருத்துவ உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அரசு கண் மருத்துவர்களின் பணிச்சுமையை, பெருமளவு குறைப்பவர்கள், நாங்கள் தான். ஆண்டுதோறும், பார்வைக் குறைபாடு உடையோர் மற்றும் சர்க்கரை நோயால், கண் பாதிப்பு அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கானோருக்கு, கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்க வேண்டி உள்ளது. இதற்கு, தற்போதுள்ள, 385 கண் மருத்துவ உதவியாளர்கள் மட்டும் போதாது. கூடுதல் பணிச்சுமை காரணமாக, மன உளைச்சல் ஏற்படுகிறது.பல இடங்களில், நிரப்பப்படாத இப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். கூடுதலாகவும் உதவியாளர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews