👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
பிளஸ் 2ல் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
அன்று முதல், 17ம் தேதி வரை, பயின்ற பள்ளியிலேயே, மாணவர்கள், இணையதளம் வாயிலாக, வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம்.இந்த சிறப்பு முகாம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் நடைபெற உள்ளது.
ஏற்கனவே, 10ம் வகுப்பு கல்வி தகுதியை பதிவு செய்தவர்கள், அந்த வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையையும் எடுத்து வந்து, கூடுதலாக, பிளஸ் 2 வகுப்பு கல்வி தகுதியை பதிவு செய்து கொள்ளலாம்.புதிதாக, பதிவு செய்வோர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் பதிவு செய்யலாம்.சி.பி.எஸ்.இ., மாணவர்கள், தங்கள் கல்வி தகுதியை, வேலைவாய்ப்பு துறையின்,
www.tnvelaivaaippu.gov.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, தமிழக அரசின், வேலைவாய்ப்பு இயக்ககம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U