👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதை, அரசு கைவிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத் தலைவர் ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் படித்து முடித்த இரண்டு லட்சம் இளைஞர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதுச்சேரி அரசு துறைகளில் 7500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இந்நிலையில், புதுச்சேரியில் இயங்கி வரும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உள்ள சூழலில், அதை 65 ஆக உயர்த்த முயற்சி நடந்து வருவதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.மேலும், இந்த நடவடிக்கை, இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலாகும்.
ஆகவே, இம்முடிவை புதுச்சேரி அரசு உடனடியாக கைவிட வேண்டும்.புதுச்சேரி மாநிலத்திற்கென தனியாக, மாநில பணியாளர் தேர்வு ஆணையத்தை உருவாக்கி, அதன் மூலம் புதுச்சேரி இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவை புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள் ஒன்று திரண்டு, அரசின் நடவடிக்கையை முறியடித்திட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U