BE கவுன்சலிங் செல்லும் மாணவ, மாணவியர்களே.. இந்த குறியீடை மட்டும் மறந்துறாதீங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

BE கவுன்சலிங் செல்லும் மாணவ, மாணவியர்களே.. இந்த குறியீடை மட்டும் மறந்துறாதீங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தரமற்ற கல்லூரிகளின் பெயர்களை குறியீடு மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் சேர்க்கை மிகக்குறைவாக உள்ள 92 இன்ஜினியரிங் கல்லூரிகளை ஒரே ஒரு குறியீடு மூலமாக ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. எனவே, கலந்தாய்வு செல்லும் மாணவர்கள் இந்த கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 537 தனியார் கல்லூரிகளி்ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐடி, திருச்சி என்ஐடி என மொத்தம் 170 பேராசிரியர்கள் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர். முடிவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சரியான உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை இல்லாதது, ஆய்வுக்கூடம் வசதி இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி இல்லாத மொத்தம் 92 கல்லூரிகளில் மீது அண்ணா பல்கலைக்கழகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி, இந்தாண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில், 25 முதல் 50 சதவீதம் வரையில், என்ஜினியரிங் சீட்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது 92 இன்ஜினீயரிங் கல்லூரிகளின் பெயர் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனியாக வெளியிடவில்லை. மாறாக 537 கல்லூரிகளோடு மொத்தமாகவே உள்ளது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு அடையாளமாக ஒன்று ‘1’ என்ற எண் கல்லூரி பெயரின் அருகில் குறிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தரமற்ற கல்லூரி பெயர் பட்டியலை வெளியிடாததுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார், இணைப்பு கல்லூரிகளின் இயக்குநர் மதுசூதனன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்திக் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
எனவே, தரமற்ற கல்லூரகளின் பெயருக்கு அருகில் 1 என்ற குறியீடு இருக்கும். இன்ஜினியரிங் கவுன்சலிங் செல்லும் மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரகளை தேர்வு செய்யும் இந்த குறியீட்டை கவனித்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்போது சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஜூலை முதல் பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தரமற்ற கல்லூரிகளின் பெயர் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் அந்த பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews