பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் புதுப்பிப்பு click here to watch the video - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் புதுப்பிப்பு click here to watch the video

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
click here to watch the video தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. www.tnschools.gov.in என்ற முகவரியில் பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்படுகிறது. துறைரீதியான அலுவல்களுக்காகவே செயல்பட்டு வந்த இணையதளத்தில் முதன்முறையாக மாணவர்கள், ஆசிரியர்களுக்கென தனித்தனி வலை பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், மாணவர் அரங்கு என்ற பக்கத்தில் புதிய புத்தகங்கள், தொழில் வழிகாட்டல் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர் மேடை என்ற பக்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தளம் என்ற பக்கமும், EMIS பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர்கள் துறைரீதியான நடவடிக்கைகள், மாணவர் நலனை மேம்படுத்தும் வகையில் அதற்கான ஆலோசனைகளை பெறலாம். மேலும், துறை அலுவலர்களுக்கான பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் வரும், பள்ளிக்கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் உள்ளிட்ட துறைகளின் பக்கங்களும் ஒரே இணையதளத்தில் தரப்பட்டுள்ளன.
இந்த ஒரு இணையதளம் மூலமாகவே, சான்றிதழ் பெறுதல், கட்டணம் செலுத்துதல், புத்தகங்கள் பெறுதல் என்று பள்ளிக்கல்வி சார்ந்த அத்தனை சேவைகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews