550 ரூபாய் நாணயம் வெளியிடுகிறது மத்திய அரசு...! எதற்காக தெரியுமா...? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 05, 2019

550 ரூபாய் நாணயம் வெளியிடுகிறது மத்திய அரசு...! எதற்காக தெரியுமா...?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
550 ரூபாய் நாணயத்தில் முன்பக்கம் ரூபாய் மதிப்புடன் அசோக சக்ரா சின்னமும், பின்புறம் குரு நானக் தேவ்-ன் உருவ படமும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் மக்களிடையே புழக்கத்தில் உள்ள நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. ரிசர்வ் வங்கி வெளியிடுள்ள அறிவிக்கையில் சீக்கியர்களின் முதன்மை குருவான குரு நானக் தேவ்-ன் 550-வது நினைவு தினத்தை ஒட்டி 550 ரூபாய் நாணயம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தற்போது 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது.
44 மி.மீ சுற்றளவில் சில்வர், காப்பர், நிக்கல் மற்றும் ஸிங்க் ஆகிய உலோகங்களின் கலவையாக நாணையம் அச்சடிக்கப்பட உள்ளது ஏற்கனவே, குருநானக் ஜெயந்தியை தேசிய சகிப்புத்தன்மை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். 35 கிராம் எடையுடன் இந்த 550 ரூபாய் நாணயம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 550 ரூபாய் நாணயத்தில் முன்பக்கம் ரூபாய் மதிப்புடன் அசோக சக்ரா சின்னமும், பின்புறம் குரு நானக் தேவ்-ன் உருவ படமும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews