👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு விஷயத்தில் தகுதி பெறாமல் உள்ளன.தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதையொட்டி பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் மே மாதம் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு வரை 5355 பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு விஷயங்களில் முழு தகுதி பெறாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய மே 31ம் தேதி வரை தான் கெடு விதித்திருந்தோம்.
சில கல்வி நிறுவனங்கள் வாகனங்கள் பணிமனைகளில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்காக வாகன எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் சிறப்பு ஆய்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.பள்ளிகள் திறக்கப்பட்டதும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை மாணவர் போக்குவரத்துக்கு பயன்படுத்துகின்றனரா என அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வர். அதுபோன்ற பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U