ரூபாய் நோட்டு மாற்றி தந்தால் கமிஷன் தருவதாக கூறி தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.3,50,000 மோசடி : இருவர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 15, 2019

ரூபாய் நோட்டு மாற்றி தந்தால் கமிஷன் தருவதாக கூறி தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.3,50,000 மோசடி : இருவர் கைது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராசிபுரம் அருகே ரூபாய் நோட்டுக்கள் மாற்றி தந்தால் கமிசன் தருவதாக கூறி பள்ளி நிர்வாகியிடம் மூன்றரை லட்ச ரூபாய் பெற்று கொண்டு தப்பி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் ஆரம்பப்பள்ளி நடத்தி வருகிறார். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட இருவர், தங்களிடம் 100 ரூபாய் நோட்டுகள் அதிகம் உள்ளதாகவும், அதனை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றி தந்தால் 20 சதவீத கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பி மாணவர்களிடம் வசூலித்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு மோகன் ராசிபுரம் சென்றுள்ளார். சேந்தமங்கலம் பிரிவு அருகே காரில் வந்த இருவர், மோகனை காரில் ஏற்றி கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டனர். பின்னர் சிறிது தூரம் சென்ற நிலையில், மோகனை இறங்கி முன் இருக்கைக்கு செல்லுமாறு கூறி காரை நிறுத்தியுள்ளனர். இதனை நம்பி அவர் இறங்கிய நிலையில், காரை எடுத்துக்கொண்டு பணத்துடன் அவர்கள் தப்பிசென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் சுனில் குமார், கோபி ஆகிய இருவரை ராசிபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews