தகுதியற்ற ஆசிரியர்களை நீக்க யுஜிசி கடிதம் அனுப்பிய நிலையில் 2020 ஜூன் வரை சம்பளம் ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

தகுதியற்ற ஆசிரியர்களை நீக்க யுஜிசி கடிதம் அனுப்பிய நிலையில் 2020 ஜூன் வரை சம்பளம் ஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உரிய கல்வித்தகுதி பெறாதவர்களை பணியிலிருந்து நீக்குமாறு யுஜிசி கடிதம் எழுதிய நிலையில், 2வது சிப்ட்டில் பணியாற்றும் 1,661 கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 2020 வரை சம்பளம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி பெறாத கவுரவ விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள் யாரும் பணியில் இருந்தால் அவர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்குமாறு 2 மாதங்களுக்கு முன் அனைத்து அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இந்நிலையில், உயர்கல்வித்துறை செயலாளர், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் நீங்கலாக பிற பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர்கள் அவர்களின் கல்வித்தகுதி தொடர்பாக பட்டியல் கேட்டிருந்தார். இந்நிலையில் யுஜிசி தகுதியில்லாத ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்குவதற்கு, அந்த ஆசிரியர்களுக்கும் சேர்த்து சம்பளம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 116ல் சிப்ட் 2ல் பணியாற்றும் 1,661 கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 15,000 வீதமும், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு அவரவர் சம்பள விகிதம் அடிப்படையில் 2019 ஏப்ரல், ஜூன் முதல் 2020 மார்ச் வரையிலான 11 மாதங்களுக்கு 27 கோடியே 73 லட்சத்து 15 ஆயிரத்து 800 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி கல்வித்தகுதி தகுதிபெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:உரிய கல்விதகுதி உள்ளவர்கள் மட்டுமே கல்லூரிகளில் ஆசிரியராக தொடர வேண்டும் என்று யுஜிசி தொடர்ந்து கூறி வரும் நிலையில், கல்வித்தகுதி பெறாதவர்களை பணியிலிருந்து நீக்குவது தொடர்பாக குறிப்பிட்ட அரசாணையில் எதுவும் இடம்பெறவில்லை. கல்லூரி முதல்வர்களால் நேரடியாக நியமிக்கப்பட்ட உரிய கல்வித்தகுதி பெறாதவர்களை பணியில் இருந்து நீக்காமல், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை, தகுதி பெறாத ஆசிரியர்களையும் பணியில் வைத்திருக்க முடிவு செய்து அவர்களுக்கும் சேர்த்து சம்பளம் ஒதுக்கீடு செய்துள்ளது அல்லது குழப்பத்தில் உள்ளது. அதே நேரத்தில் யுஜிசி கல்வித்தகுதி பெற்றுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கும், யுஜிசி நிர்ணயித்துள்ள சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews