மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 28, 2019

மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்'' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்தய்யர் கூறியுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 103வது திருத்தத்தின்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்படும் இடஒதுக்கீடுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதன் மூலம் எழுபதுக்கும் மேற்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர். இந்நிலையில் மருத்துவ படிப்புக்கு பொதுப்பிரிவினர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்தமுடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறோம்.முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் லட்சுமி நாராயணன் மறைவுக்கு சங்கத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.---
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews