உங்கள் WhatsApp ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா எப்படி கண்டு பிடிப்பது.? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

உங்கள் WhatsApp ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லையா எப்படி கண்டு பிடிப்பது.?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இப்படி பல வகைகளில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுவது சாதாரணமாகிவிட்டது. அதைத் தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஹேக்கர்களின் தொடர் திருட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நமது கடமை.
ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்டை இரண்டு செல்ஃபோன்களில் பயன்படுத்த முடியாது. இருப்பினும் உங்கள் செல்ஃபோன் நம்பரை அவரது ஃபோனில் பதிவு செய்துவிட்டால் பயன்படுத்தமுடியும். அவர்களால் உங்களின் வாட்ஸ் அப் QR கோடை எளிதில் எடுக்க முடியும். அதை வைத்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவர் உங்களை வாட்ஸ் அப்பை ஹேக் செய்துவிட்டால் நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய சாட்டிங், தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களைத் திருட முடியும். அதை வைத்து உங்களை மிரட்டலாம். அதேபோல் வாட்ஸ் அப் மூலம் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.
அப்படி யாரேனும் பயன்படுத்துகின்றனரா என்பதை அறிய வாட்ஸ்அப்பின் வலது புற மேல்பக்கம் மூன்று புள்ளிகள் இருக்கும். அதை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் விண்டோ இருக்கும். அதை கிளிக் செய்து பார்த்தால் உங்கள் ஃபோன் மற்ற எந்த டிவைஸோடு இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காண்பிக்கும். அதில் உங்களுக்குத் தெரியாத டிவைஸ் இருந்தால் அதில் " This phone could not be verified" என்று வரும். அதாவது தெரியாத நபரால் உங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. இதேபோல் மற்ற சொப்ட்வெர்களைப் பயன்படுத்தியும் உங்கள் வாட்ஸ்அப் தகவல்களைத் திருட முடியும்.
ஒருவேலை உங்கள் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டிருந்தால் support@whatsapp.com. என்கிற மெயில் ஐடிக்கு தகவல் தெரிவித்து மெயில் அனுப்பினால் உடனே உங்கள் வாட்ஸ் அப் செயலிழக்கச் ( deactivate )செய்துவிடுவார்கள். அதன் பின் 30 நாட்கள் பயன்படுத்தவில்லை எனில் முற்றிலுமாக அந்த அக்கவுண்டை டெலிட் செய்துவிடுவார்கள். பின் அதில் உங்கள் தகவல்கள் மொத்தம் அழிந்துவிடும். அதேபோல் வாட்ஸ் அப் செட்டிங்ஸில் அக்கவுண்டை கிளிக் செய்தால் 2 step verification என்று இருக்கும். அதைக் கிளிக் செய்து Enable ஐ ஆக்டிவ் செய்தால் உங்கள் தகவல் பாதுகாப்பாக இருக்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews