TRB - சட்ட கல்லூரி ஆசிரியர் பணி தகுதியானவர்களுக்கு தட்டுப்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 18, 2019

TRB - சட்ட கல்லூரி ஆசிரியர் பணி தகுதியானவர்களுக்கு தட்டுப்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
சட்ட கல்லுாரிகளின் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கு 52 இடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்துக்கு மட்டும் 13 இடங்கள் காலியாகியுள்ளன. தமிழகத்தில் அம்பேத்கர் சட்ட பல்கலையின் இணைப்பில் 10 அரசு சட்ட கல்லுாரிகளும் இரண்டு தனியார் சட்ட கல்லுாரிகளும் செயல்படுகின்றன. இவற்றில் அரசு சட்ட கல்லுாரிகளில் 17 வகை பாட பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணிக்கு 186 காலியிடங்களுக்கு 2018 அக்டோபரில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக இந்த தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் எட்டு பாடங்களில் 52 உதவி பேராசிரியர் பணிகளுக்கு தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சொத்து சட்டம் 2; குற்ற செயல்கள் 5; தொழிலாளர் சட்டம் 1; சுற்றுச்சூழல் சட்டம் 8; வரிவிதிப்பு 7; ஆங்கிலம் 13; சமூகவியல் 9 மற்றும் பொருளியல் 7 என எட்டு பாட பிரிவுகளுக்கு தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்ற செயல்கள் பாட பிரிவில் மொத்தம் ஆறு இடங்களில் ஒருவர் மட்டும் கிடைத்துள்ளார். அவரது தேர்ச்சியும் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சட்டம் பாடத்தில் 12 இடங்களில் நான்கு பேர் மட்டுமே கிடைத்துஉள்ளனர்.வரிவிதிப்பு பாடத்தில் 10 இடங்களில் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர். ஒருவரது இடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றவைக்கு தகுதியான ஆட்கள் இல்லை. ஆங்கிலத்தில் மொத்தம் 14 இடங்களில் ஒருவரது தேர்வு நிறுத்தப்பட்டுள்ளது.
மற்ற 13 இடங்களுக்கு ஆட்கள் இல்லை.சமூகவியலில் 10 இடங்களில் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது; 9 இடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை. பொருளியலில் 10 இடங்களுக்கு மூன்று இடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற இடங்களுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. இவற்றில் ஆங்கிலத்துக்கு தான் அதிக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இந்த பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாட பிரிவில் எம்.ஏ. மற்றும் எம்.எல். படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் பிஎச்.டி. அல்லது மத்திய அரசின் &'நெட்&' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டது.இந்த தகுதியுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews