இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 18, 2019

இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்த்திடும் வகையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான 25 % மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகின்றன.
இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை குறித்து அரசு புதிய முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறது. கடந்தாண்டுகளில் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாணவர் சேர்க்கையின் போது அரசு பிரதிநிதி ஒருவர் இருப்பார். அவர் முன்னிலையில் இதற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, தனிப்பட்ட முறையில் பள்ளிகள் நடத்தும் குலுக்கல் முறையிலான மாணவர் சேர்க்கையாக அல்லாமல், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாணவர் சேர்க்கைக்கு ஒட்டுமொத்தமாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இனி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் ஏழை மாணவர்கள் குறித்த மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது கிடைக்கப்பெற்றிருக்கக்கூடிய விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவர் ஆய்வு செய்வார். அதற்கு பின்பு யாருயாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கலாம் என்பதை அரசே முடிவு செய்து, தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியலை ஆன்லைனில் வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கான இறுதி முடிவு என்பது நாளை மறுநாள் திங்கள் கிழமை அன்று அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழுள்ள 1,21,000 இடங்களுக்கு நடப்பாண்டில் இதுவரை (இன்று காலை நிலவரப்படி) 1,16,869 விண்ணப்பங்கள் வந்துள்ளன. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கு இன்று இரவு 11.59 மணி வரை அவகாசம் உள்ளது. அதனால் இன்னும் கூடுதலாக விண்ணப்பங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த முறையில் கீழ் தனியார் பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பெற்றோர் தரப்பிலிருந்தும், கல்வியாளர்கள் தரப்பிலிருந்து புகார்கள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டன. இதன்காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு நடத்தி வரும் ஆலோசனையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் துப்புறவு பணியாளர்களின் குழந்தைகள் , ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் சுமார் 300 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதனால அவர்களுக்கு கட்டாயமாக இடங்கள் ஒதுக்கப்பட்டு விடும். அதற்கு அடுத்த நிலையில் உள்ள 2 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு இடம் ஒதுக்கப்படும். இதற்கான மாணவர் சேரிக்கையை குலுக்கல் முறையில் ஆன்லைனில் செய்திட அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews