எய்ம்ஸ் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; ஆடைகளுக்கு கடும் கட்டுப்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 18, 2019

எய்ம்ஸ் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; ஆடைகளுக்கு கடும் கட்டுப்பாடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
எய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மருத்துவ உயர்கல்வி நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர வரும் 25 26ம் தேதிகளில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முன்தினம் &'ஹால் டிக்கெட்&' வெளியிடப்பட்டது. இந்த தேர்வு கணினி முறையில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டுகள்: தேர்வுக்கு வருவோர் அடையாளத் துக்கான ஆவணங் களை எடுத்து வர வேண்டும். ஆதார் அட்டை பாஸ்போர்ட் வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்துடன் கூடிய வருமான வரித்துறை அட்டை அசல் ஓட்டுனர் உரிமம் 12ம் வகுப்பு தேசிய அல்லது மாநில பாட திட்டத்தில் தேர்வுக்கான புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசல் ஆவணத்தை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
இந்த தேர்வு காலை 9:00 மற்றும் பகல் 3:00 மணி என இரண்டு ஷிப்டுகளாக நடக்கிறது. மாணவர்கள் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும். பின் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிக உயரம் உள்ள காலணிகள், ஷூ போன்றவற்றை அணிந்து வர அனுமதியில்லை. ஹால் டிக்கெட்டின் ஜெராக்ஸ் அல்லாத அசல் அச்சு பிரதி எடுத்து வர வேண்டும். அதில் மாணவரின் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும். வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி அதில் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இன்னொரு புகைப்படத்தை தேர்வு மையத்துக்கு எடுத்து வரவேண்டும். தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப ஆடை அணியலாம். தலை முக்காடு தொப்பி வாட்ச் ஆபரணங்கள் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. மதம் கலாச்சாரம் தொடர்பான உடைகள் அணிந்தவர்கள் முன் கூட்டியே வர வேண்டும். பெரிய பொத்தான் உள்ளஉடை களுக்கு அனுமதியில்லை.இவ்வாறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews