ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டரில் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 02, 2019

ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டரில் இவ்வளவு ஆபத்து இருக்கிறதா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கடந்த சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநில விவசாயிகள் சிலர் எப்சி5 என்ற வகை உருளைக்கிழங்கை சாகுபடி செய்து, அதனை சிப்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தனர். சிலர் கூட்டாக இணைந்து இதனை செய்துள்ளனர். இதற்காகவே காத்திருந்த லேஸ் சிப்ஸ் நிறுவனம், அவர்கள் மீது அகமதாபாத் கோர்ட்டில் காப்புரிமை விதிமுறை மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. அதாவது இந்த வகை உருளைக் கிழங்குகள் லேஸ் சிப்ஸ் தயாரிப்பதற்காக, பெப்ஸி நிறுவனம் உருவாக்கி காப்பீடு செய்யப்பட்டது. அதனை விவசாயிகள் பயன்படுத்தி சாகுபடி செய்துள்ளனர். அதனால் ரூ.1.5 கோடி அபரதாம் செலுத்த வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை தங்களுக்கு தான் விற்பனை செய்ய வேண்டும். இனிமேல் இந்த வகை உருளைக்கிழங்கை சாகுபடி செய்யமாட்டோம் என்று எழுதித்தர வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்துள்ளது.
இந்த வழக்கு, வரும் ஜூன் மாதம் 12ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியாவின் முதன்மைத் தொழிலான விவசாயத்தில், ஒரு நிறுவனத்தின் விதைகளை சாகுபடி செய்தற்கே அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்து, நஷ்ட ஈடுகேட்டு நீதி போராட்டம் நடத்துகிறது. இதே போல இன்னொரு துறையில், இது போல காப்புரிமை பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாம் போலி தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அது கம்ப்யூட்டர் துறை.கம்ப்யூட்டரை விட அதில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் விலை மிக அதிகம். இவை எல்லாவற்றையும் ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்று கருதினால், ஒரு கம்ப்யூட்டர் வாங்கவே பல லட்சம் செலவு பிடிக்கும்.
இதனால் கம்யூட்டருக்கும், செல்போனுக்கும் காசு போடும் நம்மவர்கள் சாப்ட்வேர் பற்றி கவலைப்படுவதில்லை .எல்லாமே போலியான தயாரிப்புகள். பெப்சி நிறுவனம் போல சாப்ட் வேர் நிறுவனங்களும் வழக்கு தொடரலாம். ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யதற்கு காரணம் அவர்களுக்கு ஒவ்வொரு இந்தியரின் நடவடிக்கையும் புள்ளி விபரங்களாக கிடைப்பது தான். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 'தாஸ்', அதற்கு முன்பாக வேறு ஒரு சாப்ட்வேர் தான் கம்ப்யூட்டர் துறையில் கோலோச்சியது. அதன் பின்னர் வின்டோஸ் களம் இறங்கியதும், பெரும்பாலும் இது போலியாக பயன்படுத்தும் வாய்ப்பை அந்த நிறுவனம் உருவாக்கியது. நம்ம ஊரில் ஜியோ நிறுவனம் களம் இறங்கி இலவசமாக இணைப்பு வழங்கியதே அதே போலதான்.
விளைவு இன்றைக்கு 'தாஸ் ' முறையில் வேலை செய்ய யாருக்கும் தெரியாது. இன்றைக்கு அனைத்து செயல்களும் இணையத்தின் அடிப்படையில் தான் நடக்கிறது. இதில் டேலி போன்ற சாப்ட் வேர்கள் மட்டும் வழியில்லாமல் ஒரிஜினல் வெர்சன் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. மற்றவை போலியாக இருக்கும் பட்சத்தில், அவை என்ன என்ன தகவல்களை நம் கம்ப்யூட்டரில் இருந்து உருவுகிறது என்று தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும், நாம் சம்பந்தப்பட்ட நிரறுவனங்கள் மீது வழக்கு போட முடியாது. காரணம் அவர்கள் தயாரிப்பை தான் வாங்கவே இல்லையே. திருடனுக்கு தேள் கொட்டிய கதைதான். நம் வரவு செலவு அரசுக்கு தெரியாவிட்டால் கூட, அமெரிக்காவிற்கு தெரியும். அரசு நம்மிடம் கேட்பதற்கு பதிலாக அவர்களிடம் கேட்டு வாங்கி விட்டு போகிறது.
இதே நிலைதான் செல்போனிலும், கண்ட கண்ட செயலிகளை பதிவிறக்கம் செய்கிறோம். ஆனால் நமக்கு உதவி செய்ய இவர்கள் யார் என்ற கேள்வியை கேட்பதில்லை . அதே போனில் வங்கி தொடர்புகள் கூட இருக்கும், அருகில் இருப்பவர்கள் செல்போனை, லேப்டாப்பை பயன்படுத்த கூடாது என்று நினைத்து, அதனை பாஸ்வேர்ட் போட்டு மூடும் வழக்கம் கொண்டவர்கள் கூட, பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துக் கொண்டு இருப்பது போல, சாப்வேர் பிரச்னையை நாம் கையாள்கிறோம். இந்த அபாயத்தை உணர்ந்து விரைவில் விழித்து எழுந்தால் அனைவருக்கும் நல்லது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews