அனுபவமற்றவர்களுக்கு கல்வி சேனல் பொறுப்பு?: கல்வித்துறையில் சலசலப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 20, 2019

அனுபவமற்றவர்களுக்கு கல்வி சேனல் பொறுப்பு?: கல்வித்துறையில் சலசலப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், கல்வி சேனல் துவங்கப்பட உள்ளது. அரசு 'செட்டாப்' பாக்ஸ் மூலம், இச்சேனலை காண முடியும்.மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, பாடங்களை மாணவ, மாணவியர் எளிதில், ஆர்வமுடன் புரிந்துக் கொள்ளும் வகையில், அனிமேஷன் விளக்கப்படம் தயாரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள, மாவட்ட வாரியாக பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலருக்கு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களை இயக்கும் ஆற்றல் கூட இல்லை என்ற, சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள்கூறியதாவது; பாடங்களை எளிய முறையில், மாணவ, மாணவியர் மனதில் பதிய வைக்க வேண்டும்; அவர்கள் நல்லொழுக்கம் நிறைந்தவர் களாக வளர வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் வகுப்பறையில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்கி, தற்போது, கல்வி சேனல் வரை அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில், ஆன்ட்ராய்டு போன், கம்ப்யூட்டர் உட்படசாதனங்களை மிக துல்லியமாக இயக்கவும், அனிமேஷன், பவர்பாய்ன்ட் தயாரிப்பது போன்றகம்ப்யூட்டர் சார்ந்த அறிவாற்றல் இருக்க வேண்டும்; அந்த அறிவாற்றல், கற்பனை திறன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அனிமேஷன், 3டி,5டி என, வளர்ந்து விட்ட நவீனதொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் கற்று, தங்களது கற்பனை ஆற்றல் மூலம் பலபுதிய படைப்புகளை கண்டறிந்த ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்களின் சிறப்பான படைப்பாற்றலுக்கு முந்தைய ஆண்டுகளில்மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை கூட பெற்றுள்ளனர். அத்தகைய தொழில்நுட்ப அறிவாற்றல் பெற்ற ஆசிரியர்களுக்கு, கல்வி சேனல் நிகழ்ச்சி தயாரிப்பில் முக்கியத்துவம் வழங்கப்பட வில்லை; அவர்கள் ஓரங்கப்பட்டுள்ளனர். இவ்வாறு,அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews