வருவாய்த்துறை சான்றிதழ் மட்டுமே போதுமானது; பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிட வேண்டாம்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 15, 2019

வருவாய்த்துறை சான்றிதழ் மட்டுமே போதுமானது; பள்ளி மாற்றுச் சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிட வேண்டாம்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மாணவர்களின் பள்ளி மாற்றுச் சான்றித ழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வருவாய்த்துறை அளிக்கும் சாதி சான் றிதழை ஏற்கவும் என்று மட்டும் குறிப் பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்குகின்றன. இவை தவிர, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனி யார் சுயநிதி பள்ளிகளும் செயல்பட்டு வரு கின்றன.பள்ளிகளில் படிக்கும் மாணவர் கள் படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும்போது அவர்களுக்கு ‘டிசி’ எனப் படும் மாற்றுச்சான்றிதழ் (Transfer Certifi cate)வழங்கப்படும். அந்தச் சான்றிதழில் மாணவரின்பெயர், சாதி, மதம், தேர்ச்சி நிலை, நன்னடத்தை சான்று, முக்கியமான அங்க அடையாளங்கள் முதலிய விவரங் கள் இடம் பெற்றிருக்கும். மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லும்போது மதிப் பெண் சான்றிதழுடன் மாற்றுச் சான்றிதழை யும் சேர விரும்பும் கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.அனைத்து விதமான பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப் படையில் கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஆரம்ப காலத்தில் மாற்றுச் சான் றிதழில் சாதி குறிப்பிடுவது கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. அதன்பின் சாதியின் பெயரை குறிப்பிடுவது மாணவர்கள், பெற்றோரின் விருப்பத்துக்கு விடப்பட்டது.
அதன்படி, அவர்கள் விரும்பாவிட்டால் மாற்றுச் சான்றிதழில் சாதி குறிப்பிட தேவை யில்லை என தமிழக அரசு அறிவித்தது.சாதி பெயர் குறிப்பிடுவது விருப்பத் துக்குவிடப்பட்டாலும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் சாதியின் பெயரை குறிப்பிடுவதை அரசு தவிர்க்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள், கல்வி யாளர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்படும்மாற்றுச் சான்றிதழில் சாதியின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித் துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:2019-20-ம் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் (எமிஸ்) வழியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலகங்கள் மூலம் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை மூலமாக தனியாக சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால் மாற்றுச் சான்றிதழில் மாணவரின் சாதியை குறிப் பிட வேண்டிய அவசியமில்லை. எனவே, மாற்றுச் சான்றிதழில் மாணவர் எந்த சாதியை சார்ந்தவர் என்று குறிப்பிட வேண் டாம். மாற்றுச் சான்றிதழில்சாதியின் பெயரை குறிப்பிட வேண்டிய இடத்தில், ‘வருவாய்த்துறை வழங்கும் சாதி சான் றிதழை ஏற்கவும்’ என்று மட்டுமே குறிப் பிட வேண்டும்.அதேநேரம் சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது அவரது பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் சாதி இல்லை / சமயம் இல்லை என்று குறிப்பிட்டு சான்றிதழை வழங்க வேண்டும். மேலும், மாணவரோ, பெற்றோரோ சாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என தெரிவித்தால் அந்த இடத்தை அப்படியே காலியாகவிட்டு அவர்களுக்கு சான்றிதழை வழங்க வேண்டும். இதற்கான அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர் களுக்கும் முறையாக தெரிவித்து உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி இணைய தளம் வழியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நடப்பாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வில் தமிழகத்தில் 91.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதேபோல, தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.
அதில் மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் 29ம் தேதி வெளியானது. இதில் மொத்தம் 95.2% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஏப்.26ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. பொதுவாக தங்களது படிப்பினை முடித்த பிறகு மாணவர்களுக்கு பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். அதில் மாணவர்களது சாதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தனியாக சாதிச்சான்றிதழ் வழங்குவதால், மாற்றுச்சான்றிதழில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாணவரின் மாற்றுச்சான்றிதழில் வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை’ பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என பெற்றோர் தெரிவித்தால் அந்த இடத்தை காலியாக விட்டு மாற்றுச்சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதில் குறிப்பிட்டுள்ளது வருவாய்த்துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால் பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது மாணவர்களின் டிசி என்று கூறப்படும் மாற்றுச் சான்றிதழில் ஜாதியை குறிப்பிடும் வழக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது அம்முறை மாற்றப்பட்டு இனிமேல் மாற்றுச் சான்றிதழில் சாதியை குறிப்பிட தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews