சென்னை அரும்பாக்கம் அரசு பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ., சான்று! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 17, 2019

சென்னை அரும்பாக்கம் அரசு பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ., சான்று!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரும்பாக்கம் அரசு பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில், ஒரு கிரவுண்ட் நிலத்தில், பல்வேறு காய்கறி செடிகள் அடங்கிய பசுமை தோட்டத்தை உருவாக்கி, மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். படை: இதற்காக, கல்வியியல் ஆராய்ச்சி மாணவி, சங்கீதா, 37, என்பவர், பள்ளி மாணவர் குழுவை கொண்ட, தேசிய பசுமைப்படையை அமைத்தார்.இந்த மாணவர் குழு, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, அவரை, வெண்டை, புடலங்காய், நெல், சோளம், இஞ்சி உள்ளிட்ட பல வகையான பயிர்களை பயிரிட்டு, தோட்டத்தை உருவாக்கினர். இது குறித்து, 8ல், நமது நாளிதழில், விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது. இதையடுத்து, 9ல், அப்பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர், டி.சேகர், 58, கூறியதாவது:சர்வதேச அளவில், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ஐ.எஸ்.ஓ., தரச்சான்றுகள் வழங்கி வருகின்றன. இதில், இங்கிலாந்தை தலைநகராக கொண்ட, எஸ்.ஜி.எஸ்., என்ற, மிகப்பெரிய நிறுவனம், எங்களுக்கு சான்று வழங்கி உள்ளது.இதற்காக, பள்ளியில் மாணவர் சேர்க்கை, வருகைப் பதிவு, கல்வி பயிற்றுவித்தல் ஆகியவற்றில் கையாளப்படும் முறைகள் கண்காணிக்கப்பட்டன. பள்ளியின் தினசரி கால அட்டவணை, தேர்வு அட்டவணை, மாணவர்களை தேர்விற்கு தயார் செய்யும் விதம், விடைத்தாள் திருத்தும் விதம், தேர்ச்சி விகிதம் ஆகியவை குறித்தும், ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு பள்ளியின் சுகாதாரம், கட்டட உறுதித்தன்மை, தீயணைப்பு ஆகிய சான்றிதழ்கள், அனைத்து ஆய்வகங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்புகள், முழுமையாக உள்ளதா எனவும், ஆய்வு செய்யப்பட்டது.இதற்காக, இரண்டு முறை, அந்நிறுவன தணிக்கை குழுவினர், பள்ளியை பார்வையிட்டனர். முதல் ஆய்வில், பள்ளியில் உள்ள குறைகளை சரிசெய்யக் கூறினர்.இரண்டாவது ஆய்வின்போதும், பள்ளியில் இருந்த, சிறு சிறு குறைகளை சரிசெய்ய, 60 நாள் கால அவகாசம்வழங்கினர். நிறுவனம் கூறிய குறைகளை, நிவர்த்தி செய்ய, 10 ஆசிரியர்கள் தலைமையில் குழுக்களை அமைத்து, மூன்று மாதங்களாக, தீவிரமாக பணியாற்றினோம்.மாணவர் சேர்க்கை துவங்கி, அனைத்து பணிகளுக்கும், தனித்தனியே அறைகள் அமைக்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் மட்டும் இன்றி, இதர தேவைகளுக்கான பொருட்களையும், மாணவர்கள் எளிதில் எடுத்துப் பயன்படுத்தும் வகையில், வரிசைப்படுத்தினோம்.
இது குறித்து, அந்நிறுவன குழுவினர், இரண்டு நாள் தணிக்கை நடத்தினர்.பள்ளி வளாகத்தில், பசுமை தவழும் தோட்டம் அமைக்கப்பட்டு, மாணவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழ் சுட்டிக்காட்டி, விரிவான செய்தி வெளியிட்டது.இந்த செய்தி வெளியான அடுத்த நாளான, மே 9ல், பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ., சான்று கிடைத்தது. இதேபோல், விருகம்பாக்கம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், எஸ்.ஜி.எஸ்., நிறுவனம், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று அளித்துள்ளது. அந்த பள்ளியில், 100க்கும் மேற்பட்ட, நிழல் தரும் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சான்றை தொடர்ந்து, சென்னையில் உள்ள, 28 அரசுப் பள்ளிகளுக்கும், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறும் வகையில், அவற்றின் தரத்தை உயர்த்த, எங்களை விழிப்புணர்வு ஏற்படுத்த, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.மேலும், தமிழகம் முழுவதும் உள்ள, 60க்கும் மேற்பட்ட மாதிரி பள்ளிகளும், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறும் வகையில் தயார் செய்ய, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். ஒத்துழைப்பு
இப்பள்ளியில், தோட்டம் அமைய முக்கிய காரணமாக இருந்த, ஆராய்ச்சி மாணவி, சங்கீதா கூறியதாவது:அடிப்படையில், நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், எனக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம் இருந்தது.நான் இந்த பள்ளிக்கு சென்ற போது, மாணவர்களுக்கு, தாவரங்கள் மீது எந்தவித புரிதலும் இல்லை. நெல், கரும்பு உள்ளிட்ட நாற்றுகளை பார்க்கும் போது, அதை புற்கள் என நினைத்தனர். அவர்களுக்கு விவசாயத்தை பற்றி புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, அந்த பள்ளியில், விவசாயப் பணியை துவங்கினேன்.பள்ளி காவலாளி, தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர், எனக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். மாணவர்களும், மிகுந்த ஆர்வத்துடன், தோட்ட பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.அனைவரும் ஈடுபாட்டுடன் உழைத்ததால், கை மேல் பலன் கிடைத்தது; பாராட்டும் குவிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews