தகுதியான ஆசிரியர்கள் நியமிக்காமல் அரசுப் பள்ளிகளில் ஜூனில் எல்கேஜி தொடங்குவது சாத்தியமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

தகுதியான ஆசிரியர்கள் நியமிக்காமல் அரசுப் பள்ளிகளில் ஜூனில் எல்கேஜி தொடங்குவது சாத்தியமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு இறுதியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஜனவரியில் சென்னை எழும்பூரில் உள்ள மாநில மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பாடப்புத்தகம், புத்தகப்பை, காலனி உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.
அப்போது 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜனவரியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள்தான் கவனித்தனர். எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதற்காக வழக்கும் தொடரப்பட்டது. இதனால் ெதாடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை எல்கேஜிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 2019-20ம் கல்வியாண்டில் அங்கன்வாடி மையங்களுடன் இணைந்த பள்ளிகளிலும் வாய்ப்புள்ள பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களை சேர்க்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே மாவட்டத்திற்கு ஒரு மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி என அறிவிக்கப்பட்ட பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் தொடங்குவதற்காக மாணவ, மாணவிகள் சேர்க்கும் பணி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தின் மாதிரி அரசுப்பள்ளியான அம்பை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இதுவரை 28 பேர் எல்கேஜி வகுப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் பிற பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களை சேர்ப்பதற்கு முயற்சிமேற்ெகாள்ளப்படுகிறது. ஆனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது யார், அங்கன்வாடி அமைப்பாளர்களா, ெதாடக்கப்பள்ளி ஆசிரியர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற பல வினாக்களுக்கு தெளிவான விடை அரசு தரப்பில் இருந்து வராததால் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்க்க பெற்றோர் யோசிக்கின்றனர். எனவே எல்கேஜி வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்து அரசு தெளிவாக உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தகுதியான ஆசிரியர்கள் தேவை இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், “மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரித்து தொடக்கப்பள்ளிகளில் உள்ள இடங்களை பணி நிரவல் அடிப்படையில் நிரப்பிவிட்டு கூடுதல் ஆசிரியர்களை எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பயன்படுத்தலாம் என நீதிமன்றம் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. ஆனால் இது எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. எல்கேஜி மாணவர்கள் சேர்ப்பதற்கு அரசு முழு நெறிமுறைகளையும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் தெளிவாக அறிவிக்க வேண்டும். தொடக்கப்பள்ளிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்கேஜி வகுப்பிற்கு அதற்கென பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள் வேலையின்றி இருக்கிறார்கள். அவர்களை பள்ளி திறக்கும் முன்பு பணியில் அமர்த்தி முறைப்படி தொடங்கினால் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்”, என்றனர்.
அப்பவே தொடங்கிட்டாங்க.... அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என இப்போது அரசு அறிவித்தாலும் சில அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மாணவர்கள் சேர்க்கப்படுவது நடைமுறையில் உள்ளது. அந்த பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வம் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு போன்றவைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக தனியாக பயிற்சி ெபற்றவர்களை அவர்களே நியமித்து சொந்த செலவில் சம்பளமும் வழங்குகின்றனர். இதுபோன்ற அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில கல்வித்திறன் சிறப்பாக உள்ளது என கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews