👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் வரலாறு துறைகளில் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழகப் பதிவாளர் ச. முத்துக்குமார் கூறியது:
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர், ஆய்வியல் நிறைஞர், முதுகலை போன்ற பட்டப் படிப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன் கருதி, தற்போது தமிழ் மற்றும் வரலாறு துறையில் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்பு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் நேரடியாகப் பல்கலைக்கழகப் பயிற்சி அளிப்பதன் மூலம் சிறந்த தமிழ் அறிஞர்களை உருவாக்க இயலும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்தப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆண்டுகள் நிறைவு செய்த பிறகு, விருப்பத்தின் அடிப்படையில் இளங்கலைப் பட்டம் பெறும் வசதி உள்ளது. இப்படிப்புக்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளவும், நிறைவு செய்து அளிக்கவும் கடைசி நாள் மே 20-ஆம் தேதி. விண்ணப்பக் கட்டணம் (பொது) ரூ. 300. பட்டியல் இனத்தவருக்கு (உரிய சாதி சான்றிதழுடன்) ரூ. 150. மேலும் விவரங்களுக்கு
www.tamiluniversity.ac.in என்ற தமிழ்ப் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U