பத்தாம் வகுப்பு தேறியோர் இசை படித்து சாதிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 09, 2019

பத்தாம் வகுப்பு தேறியோர் இசை படித்து சாதிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பத்தாம் வகுப்பு தேறியோர் கூட, அரசு இசைக் கல்லுாரிகளில், இசையை படித்து சாதிக்க முடியும்.தமிழக அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ், சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய இடங்களில், இசைக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. சென்னையில், பல்கலையும் இயங்கி வருகிறது. இவற்றில், தற்போது, குரலிசை, வாத்திய இசை உள்ளிட்டவற்றை படிக்க, விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது. அடுத்த மாதம் வரை, விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.டிப்ளமா படிப்புகளுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சியும், பட்டப் படிப்புக்கு, பிளஸ் 2 தேர்ச்சியும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு, குரல், வயலின், வீணை, மிருதங்கம், தவில், கடம், மோர்சிங், கிராமியக்கலை, பரதநாட்டியம், நட்டுவாங்கம் உள்ளிட்ட படிப்புகளுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சியே போதும்.மேலும், இதே பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெறவும், இசை ஆசிரியர் பயிற்சி பெறவும், பிளஸ் 2 கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரசு இசைக் கல்லுாரிகளில் விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்டவை மிகக்குறைவு; பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.இசையார்வம் உள்ள மாணவர்கள், இந்த படிப்புகளை தேர்ந்தெடுத்தால், சிறந்த எதிர்காலம் இருக்கும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2493 7217 என்ற தொலைபேசி எண்ணில் பேசி, தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews