இந்த ஆண்டு நீட் ரோல் நம்பருடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியாகும்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 16, 2019

இந்த ஆண்டு நீட் ரோல் நம்பருடன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியாகும்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நீட் ரோல் நம்பருடன் இந்த ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரி கூறினார். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. தமிழகம் உள்பட சில மாநிலங்கள் நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு பெற்றன. அதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு அமலானது. அந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த மருத்துவ கவுன்சலிங் முதல் நாளில் பிற மொழி பேசக்கூடியவர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இரு வேறு மாநிலங்களில் இருப்பிட சான்று பெற்று மருத்துவக் கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்ததன் மூலம் தமிழக மாணவர்கள் பலருக்கு இடம் கிடைக்காமல் போனதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது.
2017ம் ஆண்டு கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் விண்ணப்பித்தவர்களுக்கான அந்த மாநில மருத்துவக்கல்வி இயக்ககங்கள் வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் 9 இலக்க நீட் ரோல் நம்பர் இடம்பெற்றிருந்தது. ஆனால் தமிழக மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்ட பட்டியலில் நீட் ரோல் நம்பருக்கு பதிலாக நீட் பதிவு எண்(ரிஜிஸ்டர் நம்பர்), அப்ளிகேசன் ரெபரன்ஸ் நம்பர் இடம்பெற்றிருந்தது. 2018ம் ஆண்டும் தமிழக மருத்துவக்கல்வி இயக்ககம் வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் அப்ளிகேசன் ரெபரன்ஸ் நம்பர் மட்டுமே இருந்தது. இந்நிலையில் நீட் ரோல் நம்பருடன் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தால், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை ரோல் நம்பர் அடிப்படையில் எளிதில் கண்டுபிடித்திருக்க முடியும் என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: நீட் ரோல் நம்பர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறானதாக இருக்கும். ஒரு மாநிலத்தை பொறுத்தவரை முதல் சில இலக்க எண்கள் ஒன்றாக இருக்கும். அதன்மூலம் வெளி மாநில மாணவர் ஒருவர் தமிழகத்தில் எம்பிபிஎஸ்/பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தால் தரவரிசைப்பட்டியல்களை ஒப்பிட்டு எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் 8 இலக்கம் கொண்ட நீட் ரிஜிஸ்ட்ரேசன் நம்பர் அனைவருக்கும் பொதுவானது, இதை வைத்து மாணவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை கண்டறிய முடியாது. 2018ல் அப்ளிகேசன் ரெபரன்ஸ் நம்பருடன் மட்டுமே பட்டியல் வெளியிடப்பட்டது. அவ்வாறு நீட் ரோல் நம்பருடன் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாததால், இரு மாநிலங்களின் பட்டியல்களில் ஒரே பெயர், மதிப்பெண் கொண்ட மாணவர்களின் பிரித்து எடுக்க முடிந்தது.
ஆனால் இருவரும் ஒரே ஆள் என்பதை நிருபிக்க முடியவில்லை. இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர். 2017ம் ஆண்டு கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் நீட் ரோல் நம்பருடன் தரவரிசைப்பட்டியல் வெளியிட்டபோது, தமிழக மருத்துவக்கல்வி இயக்ககம் நீட் ரோல் நம்பர் இல்லாமல் பட்டியல் வெளியிட்டதற்கு எதேனும் காரணம் உள்ளதா என மருத்துவக்கல்வி இயக்க மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: எம்பிபிஎஸ்/பிடிஎஸ் தரவரிசைப்பட்டியலில் மாணவர்கள் தங்களின் ரேங்கை உறுதிப்படுத்திக்கொள்ள ஏதேனும் ஒரு எண் இருந்தால் போதுமானது. நீட் ரோல் நம்பர் தரவரிசைப்பட்டியலில் இடம்பெறாததற்கு காரணம் எதுவும் இல்லை. இந்த ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் தரவரிசைப்பட்டியலில் நீட் ரோல் நம்பர் இடம்பெறும். இவ்வாறு மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரி கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews