👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
உயர்கல்வி என்பது குறிப்பிட்ட சில துறைகளை மட்டுமே சார்ந்ததாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை... எந்த துறையிலும் நிபுணத்துவம் பெறத் துணை புரிவதே உயர்கல்வி... அவ்வகையில் இளைஞர்கள் பலருக்கும் பிடித்தமான ஒரு துறை விளையாட்டு!
முக்கியத்துவம்
மத்திய விளையாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 1961ம் ஆண்டு பட்டியாலாவில் துவங்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமே ‘நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்’ (என்.எஸ்.என்.ஐ.எஸ்.,). ஆசியக் கண்டத்திலேயே விளையாட்டு படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்களுள் மிகப் பெரியது என்று பெயர் பெற்றுள்ள என்.எஸ்.என்.ஐ.எஸ்., சர்வதேச போட்டிகளுக்குத் திறமையான பயிற்சியாளர்களை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதான படிப்புகள்
* டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங்
* எம்.எஸ்சி., இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங்
* ஸ்கில் டெவலப்மெண்ட் கோர்ஸ்
* சர்டிபிகேட் கோர்ஸ்
* பி.ஜி., டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் மெடிசன்
முக்கிய துறைகள்
ஸ்போர்ட்ஸ் மெடிசன், எக்சர்சைஸ் பிசியாலஜி, ஸ்போர்ட்ஸ் பயோகெமிஸ்ட்ரி, ஸ்போர்ட்ஸ் ஆந்த்ரபாலஜி, ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, ஸ்போர்ட்ஸ் நியூட்ரீஷியன், ஜென்ரல் தியரி அண்ட் மெதட்ஸ் ஆப் டிரைனிங், பயோமெகானிக்ஸ்
உள்கட்டமைப்பு வசதிகள்
இந்தியாவின் பிற பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில் விடுதிகள், நூலகம், அருங்காட்சியகம், தேர்ந்த ஆசிரியர்கள், விளையாட்டு திடல் என அனைத்து வசதிகளும் நிறைந்த சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது. குறிப்பாக, பாட்மிண்டன் கோர்ட் - 4, பேஸ்கட் பால் கோர்ட் - 3, பாக்ஸிங் ரிங் - 2, பில்லர்ட்ஸ் ரூம் - 1, கண்டிஷனிங் ஹால் - 3, ஜிம்னாசியம் - 3, ஹாண்ட் பால் கோர்ட் - 1, ஜூடோ ஹால் - 2, சாவ்நா அறை - 2, ஸ்டீம் - 2, குயாஷ் கோர்ட் - 2, டேபிள் டென்னிஸ் ஹால் - 2, வாலிபால் ஹால் - 1, ரெஸ்ட்லிங் ஹால் - 1, வெய்ட்லிப்டிங் ஹால் - 1, ஸ்ட்ரென்த் டிரைனிங் ஹால் - 1 ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.
வாய்ப்புகள்
இங்குப் பயிலும் மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு வீரருக்குத் தேவையான உடல்வாகு மட்டுமின்றி விளையாட்டு தொடர்பாகத் தெரிந்திருக்க வேண்டிய யுக்திகள், வரலாறுகள் மற்றும் உளவியல் புரிதல்கள் ஆகிய பயிற்சிகளும் சிறந்த முறையில் வழங்கப்படுவதால், விளையாட்டுத் துறை சார்ந்த அடிப்படைகள் அனைத்தையும் கற்றுத் தேரும் வாய்ப்பினை பெறுகிறார்கள். இங்குப் பயிலும் மாணவர்கள், தேவையான யுக்திகளை அறிந்ந்து, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், அரசு மற்றும் தனியார் விளையாட்டு துறைகளில் பயிற்சியாளராகவும் பணி வாய்ப்பினை பெறலாம். சுயமாக விளையாட்டு பயிற்சி மையங்கள் துவங்கலாம்.
விபரங்களுக்கு:
https://nsnis.org/
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U