IAS அதிகாரிகளை உருவாக்கும் அதிகாரிகள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2019

IAS அதிகாரிகளை உருவாக்கும் அதிகாரிகள்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஐ.ஏ.எஸ். கனவோடு பயிற்சிக்கு வரும் ஒரு மாணவனுக்குத் தரமான பயிற்சியை வழங்கி அவன் கனவை நனவாக்க ஒரு IAS அதிகாரியே பயிற்சியளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு IAS அதிகாரிகள் ஒன்றிணைந்து தொடங்கிய பயிற்சி மையம் என்ற சிறப்புமிக்கது கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி. இதன் செயல்பாடுகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் குறித்து பயிற்சி மைய நிறுவனர் பூமிநாதன் பகிர்ந்துகொண்ட தகவல்களைப் பார்ப்போம்…
‘‘இப்பயிற்சி மையத்தின் சிறப்பே தற்போது பணியில் உள்ள மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.ஆர்.எ.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்படுவதுதான். சிவில் சர்வீஸ் ஆபிசர்களின் அனுபவமும், வழிகாட்டலும், மாணவர்களைத் தன்னம்பிக்கையுடன் தேர்வை அணுகச்செய்து வெற்றிபெறச் செய்கிறது.வெறும் வணிகம் சார்ந்த பயிற்சி மையமாகச் செயல்படாமல், தரமான பயிற்சியைச் சேவை மனப்பான்மையுடன் வழங்குவதே கடமையெனக் கொண்டுள்ளது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி. மாணவர்களின் நலன் சார்ந்த பயிற்சி மையம் என்பதை உணர்த்தும் அகாடமியின் செயல்பாடுகள் சிலவற்றைக் கூறியே ஆகவேண்டும். அவை…
* பயிற்சி மையம் தொடங்கப்பட்ட ஐந்து வருடங்களில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய சுமார் 150 மாணவர்கள் 100% ஸ்காலர்ஷிப் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். பொதுஅறிவு மற்றும் திறனாய்வுத் தேர்வுகளின் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் பயிற்சிக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

* ஐ.ஏ.எஸ். பயிற்சிக்குத் தேவையான மொத்தம் பதினெட்டுப் புத்தகங்களும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

* தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் அரசு சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுவதால், இந்நிகழ்ச்சிகளின் வழியாக இரண்டு வகையான பயன்கள் கிடைத்துள்ளன.
1. சிவில் சர்வீஸ் சார்ந்த தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி தமிழகத்தின் கடைக்கோடி வரையிலும் விரிவாக விளக்கும் வாய்ப்பு.
2. மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி தேர்வுகளுக்குச் சிறப்பான பயிற்சி பெற வழிவகை செய்தல். மேலும் உனக்குள் ஒரு ஐ.ஏ.எஸ். என்ற திட்டத்தின் மூலம் மதுரை, திருச்சி, கோவை, சென்னை எனத் தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் விழிப்புணர்வு மேற்கொண்டது பல பயன்களைத் தந்துள்ளது. கிங்மேக்கர்ஸ் அகாடமியின் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வழியே சுமார் ஒரு லட்சம் இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 23 ஆயிரம் மாணவர்கள் மத்திய மாநிலத் தேர்வுகளுக்குப் பயிற்சி பெற்றுள்ளனர்.

* தமிழகத்தின் முன்னணிக் கல்விநிறுவனங்களான சாய்ராம் எஞ்சினியரிங் கல்லூரி, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், தனலட்சுமி எஞ்சினியரிங் கல்லூரி, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கொங்குநாடு எஞ்சினியரிங் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்குச் சென்று ஐ.ஏ.எஸ். பயிற்சி வழங்கப்படுகிறது.
மொத்தத்தில் ஹைடெக் கிளாஸ் ரூம், தரமான உள்கட்டமைப்பு வசதி, ஆரோக்கியமான ஹாஸ்டல் சூழல் எனச் சிறப்பான, தரமான ஐ.ஏ.எஸ். பயிற்சியை வழங்கிவருகிறது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி’’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் பூமிநாதன். இப்பயிற்சி மையம் வழங்கும் நவீன தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் பற்றிக் கூறும்போது, ‘‘சேவை மனப்பான்மையுடன் கூடிய அனுபவமிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்படுவது என்பது கூடுதல் சிறப்பு. இப்பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் சிவில் தேர்வுகளைப் பற்றிய விரிவான புரிதல்களைப் பெறுகின்றனர்.

தேர்வுகளுக்குத் தேவையான அப்டேட்டட் ஸ்டடி மெட்டீரியல்கள் மற்றும் சிவில் தேர்வு எழுதும் அனைவரும் பயன்படுத்தும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆப் ஆகியன மாணவர்கள் எளிமையாகத் தேர்வை எதிர்கொள்ள வழிவகை செய்கின்றன. நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் ஆப்-ல் பதிவேற்றுதல், தினமும் 20 வகையான அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்காக ஒவ்வொரு வாரமும் தனியாக நேரம் ஒதுக்குதல் என நடப்பு நிகழ்வுகளுக்கென பிரத்யேக செயல்பாடுகள் தேர்வுகளில் நடப்பு நிகழ்வு சார்ந்த கேள்விகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்துகிறது. தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ்மொழியில் ஸ்டடி மெட்டீரியல் வடிவமைத்து மாணவர்களைத் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதச் செய்வதில் முன்னோடியாகச் செயல்படுகிறது கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி.
தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் சுமார் 159 பேர் தேர்வுகளில் வென்றுள்ளனர். இந்தியாவின் முதல் பார்வையிழந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி என்.எல்.பினோ ஜெபின், தமிழில் தேர்வு எழுதி வென்ற எ.மணிகண்டன் மற்றும் முதல் முயற்சியிலேயே மாநில டாப்பராக ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்ற பிரதாப் ஆகியோர் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்று பெருமிதத்தோடு சொல்லி முடித்தார் பூமிநாதன்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews