கல்லுாரிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், வேலைவாய்ப்பு பெறத்தக்க படிப்புகள் எனக்கூறி, புதிய பெயர்களில் இளநிலை, முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. அரசின் அங்கீகாரம் இன்றி வழங்கப்படும் இதுபோன்ற படிப்புகளில் சேரும், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆவதாக, பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.கல்லுாரிகளில் துவங்கப்படும் புதிய பாடப்பிரிவுகளுக்கு, பல்கலையின் அங்கீகாரம் பெறுவது மட்டுமின்றி, அரசின் ஒப்புதலும் பெற வேண்டியது கட்டாயம். அவ்வாறு பெறாத பட்சத்தில், அப்பாடப்பிரிவுகளில் படித்து வெளிவரும் மாணவர்கள், எதிர்காலத்தில் அரசு துறை வேலைகளில் சேர இயலாது.
மாணவர்களே...உஷார்!பிளஸ்2 முடித்து தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவர்கள், இதில் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்கின்றனர் கல்வியாளர்கள் .உதாரணமாக, பி.காம்., என்ற படிப்பை மையமாக கொண்டு, பி.காம்., பிரொபஷனல் அக்கவுன்ட்டிங், பி.காம்., சி.ஏ., பி.காம்., பேங்கிங்.,பி.காம்., வெளிநாட்டு வர்த்தகம் என, 25 வகையிலான பாடப்பிரிவுகள், பெரும்பாலான கல்லுாரிகளில் உள்ளன.எம்.ஏ., பொருளாதார படிப்பை எம்.ஏ., பிசினஸ் எகனாமிக்ஸ் என்றும், பி.ஏ., ஆங்கில படிப்பை பி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் செயல்பாட்டு ஆங்கிலம் என்றும், எம்.ஏ., தமிழ் இலக்கியம் படிப்பை, எம்.ஏ., தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு ஆகிய பெயர்களிலும் தருகின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல் என அனைத்திலும், பல புதிய பாடப்பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.அரசு ஆணை கட்டாயம்இதுபோன்ற புதிய பாடப்பிரிவுகள், சம்பந்தப்பட்ட மையப்பாடப்பிரிவுக்கு இணை என்று, தமிழக அரசு ஆணை வெளியிட்டால் மட்டுமே, மாணவர்கள் அரசுத்துறையில் வேலைவாய்ப்பை பெற முடியும்
உயர்கல்வி, வெளிநாட்டு கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும், இதே சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது. கோவை பாரதியார் பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் சில கல்லுாரிகளிலும், இச்சிக்கல் உள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பசுபதி கூறியதாவது:பல்கலை அங்கீகாரம் மட்டும் பெற்று, புதிய பெயர்களில் துறைகள் துவக்கப்படுகின்றன.படித்து முடித்தபிறகே பலருக்கு, அதிலுள்ளசிக்கல்கள் புரிகிறது.நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பி.காம்., பிரிவு மட்டுமின்றி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி எனவும், முதுநிலையில், எம்.எஸ்சி., சாப்ட்வேர் சயின்ஸ் என புதிய பெயர்களில் சேர்த்து விடுகின்றனர். அரசின் ஒப்புதல் பெற வேண்டிய பல்கலையும், கல்லுாரிகளும் மாணவர்களை பற்றி சிந்திப்பதில்லை.
மாணவர்கள் தான் இணை' சான்றிதழுக்கு அலைகின்றனர்.தற்போது, கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு தகுதி என்று கூறிவிட்டனர்; இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்தவர்களின் நிலை என்ன என்று அரசு விளக்க வேண்டும்.ஒரு பாடப்பிரிவு துவங்கும் போது, பல்கலை அதன் தகவல்களை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் துவக்க அங்கீகாரம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.பி.காம்., என்ற படிப்பை மையமாக கொண்டு, பி.காம்., பிரொபஷனல் அக்கவுண்ட்டிங், பி.காம்., சி.ஏ., பி.காம்., பேங்கிங்., பி.காம்., வெளிநாட்டு வர்த்தகம் என, 25 வகையிலான பாடப்பிரிவுகள், பெரும்பாலான கல்லுாரிகளில் உள்ளன. 'புதிய பெயர்களில் கவனம்'கல்வியாளர் சிவக்குமார் கூறுகையில், பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் என மையப்பாடங்களை எடுப்பதே சிறப்பு.
அத்துறை கிடைக்கவில்லை என, புதிய பெயர்களில் உள்ள பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் போதும் கவனம் அவசியம். அரசு துறைகள் மட்டுமின்றி, சில தனியார் துறைகளும் மையப்பாடப்பிரிவுகளை தவிர்த்த, பிற துறைகளுக்கு முன்னுரிமை தருவதில்லை, என்றார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்