இஸ்ரோ விஞ்ஞானி ஆக ஐ.ஐ.எஸ்.டி., படிப்பு பற்றிய முழு விவரம் இதோ!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2019

இஸ்ரோ விஞ்ஞானி ஆக ஐ.ஐ.எஸ்.டி., படிப்பு பற்றிய முழு விவரம் இதோ!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

விண்வெளி துறையில் உலகத் தரம் வாய்ந்த பட்டப்படிப்புகளையும், ஆராய்ச்சி கல்வியினையும் வழங்குவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனமே ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ எனப்படும் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்.
முக்கியத்துவம்:
ஆசியாவின் முதல் விண்வெளி பல்கலைக்கழகமான ஐ.ஐ.எஸ்.டி., 2007ம் ஆண்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மற்றும் மத்திய விண்வெளி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்டது. இந்த கல்வி நிறுவனம் துவங்கப்பட்டு ஒரே வருடத்திலேயே பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் மத்திய மனித வளத் துறை அமைச்சகத்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இங்குப் பயிலும் மாணவர்களுக்கு இஸ்ரோவில் நேரடியாக பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படுவது இக்கல்வி நிறுவினத்தின் மிக முக்கிய அம்சம்.
படிப்புகள்:
 பி.டெக் - 4 ஆண்டுகள்
 எம்.டெக்., / எம்.எஸ் - 2 ஆண்டுகள்
 இன்டக்ரேட்டட் எம்.டெக்/எம்.எஸ் - 5 ஆண்டுகள்
 பிஎச்.டி - 5 ஆண்டுகள்
முக்கிய பிரிவுகள்:
 ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
 ஏவியோனிக்ஸ்
 கெமிஸ்ட்ரி
 எர்த் அண்ட் ஸ்பேஸ் சயின்சஸ்
 ஹுமானிட்டீஸ்
 மேத்மெடிக்ஸ்
 பிசிக்ஸ்
உதவித்தொகைகள்:
ஒவ்வொரு நிலை படிப்பிற்கும் மாணவர்களின் கல்வித் திறனிற்கு ஏற்ப பல்வேறு நிதி உதவிகள் மத்திய விண்வெளி துறையால் வழங்கப்படுகிறது. இளநிலை படிப்பில் முழு ‘டி.ஓ.எஸ்.அசிஸ்டன்ஸ்ஷிப்’ பெற்ற மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுவதோடு, புத்தகம் வாங்குவதற்காக ரூ.3000 வழங்கப்படுகிறது. அதேபோல் யு.ஜி.சி., மற்றும் மனித வளத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் நிதியுதவிகள் முதுநிலை பட்டதாரிகளுக்கு உண்டு. ஆராய்ச்சி படிப்பில் ‘நெட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.25,000 வழங்கப்படும். இரண்டாண்டுகள் கழித்து இது ரூ.28,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தகுதிகள்:
இளநிலை பட்டப்படிப்பில் சேர ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டமும், கேட் / ஜெஸ்ட்/ யூ.ஜி.சி.நெட் தேர்வை எழுதியிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகள்:
இங்குப் பயிலும் மாணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நேரடியாகப் பணி வாய்ப்பு வழங்கப்படுவதோடு, இங்கு பணி செய்து கொண்டே மேற்படிப்புகளை ஐ.ஐ.எஸ்.டி., கல்வி நிறுவனத்தில் பயில்வதற்கான வசதிகளும் செய்து தரப்படுகிறது.

விபரங்களுக்கு: www.iist.ac.in
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews