வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய படிப்புகள் அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய படிப்புகள் அறிமுகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2005ம் ஆண்டு 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் செயல்பட தொடங்கியது. Introduction of new courses at Vellore Government Medical College அத்துடன் டிப்ளமோ இன் நர்சிங், டிப்ளமோ இன் லேப் டெக்னாலஜி, டிப்ளமோ இன் எமர்ஜென்சி கேர் டெக்னீசியன், பிசிசியன் அசிஸ்டன்ட், டிப்ளமோ இன் ரேடியாலஜி அண்ட் இமாஜின் என இதர படிப்புகளும், ஓராண்டு ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டன்ட், ஆர்த்தோ டெக்னீசியன் என பிற சான்றிதழ் படிப்புகளிலும் சேர்க்கை நடந்து வந்தது.
இவற்றுடன் முதுநிலை மருத்துவ படிப்புகளான 10 சீட்டுகளுடன் எம்டி ஜெனரல் மெடிசன், 9 சீட்டுகளுடன் எம்எஸ் ஜெனரல் சர்ஜரி, 4 சீட்டுகளுடன் எம்டி அனஸ்தீசியா படிப்புகளும் உள்ளன. இதில் கடந்த ஆண்டு டிப்ளமோ படிப்புகளாக இருந்த பிசிசியன் அசிஸ்டன்ட், ரேடியோலஜி அண்ட் இமாஜின், எமர்ஜென்சி கேர் டெக்னீசியன் படிப்புகள் பி.எஸ்சி இளநிலை பாரா மெடிக்கல் படிப்புகளாக மாற்றப்பட்டு சேர்க்கை நடந்தது. இவற்றுடன் பி.எஸ்சி ஆபரேஷன் அண்ட் அனஸ்தீசியா டெக்னீசியன் படிப்பும் தொடங்கப்பட்டு சேர்க்கை நடந்தது.
இந்நிலையில் வரும் 2019ம் கல்வி ஆண்டில் பி.எஸ்சி லேப் டெக்னாலஜி, பி.எஸ்சி நர்சிங் ஆகிய இளநிலை படிப்புகளும் தொடங்கப்பட உள்ளன. அதேபோல் முதுநிலை மருத்துவ படிப்பில் எம்.டி குழந்தைகள் நலம், எம்.எஸ். மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் மருத்துவம் ஆகிய படிப்புகள் தலா 6 சீட்டுகளுடன் தொடங்கப்பட்டு சேர்க்கை நடைபெற உள்ளது. 2020-21ம் கல்வி ஆண்டில் 6 சீட்டுகளுடன் எம்.எஸ் ஆர்த்தோபீடிக் படிப்பும், 4 சீட்டுகளுடன் உள்ள எம்.டி. அனஸ்தீசியா படிப்பில் 5 சீட்டுகள் அதிகரிக்கப்பட்டு 9 சீட்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுதவிர பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் புதிதாக தொடங்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மேம்படுத்தப்பட உள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews