👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சஹானாவின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயனுக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கஜா புயலின் தாண்டவத்தில் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்தனர். அப்புயலில் தஞ்சாவூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதியின் பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த சஹானாவின் வீடும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. இதில் 600-க்கு 524 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் சஹானா. அப்பகுதி மக்கள் பாராட்டினாலும், இது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியரான செல்வம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ''மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து,
நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.#ஊக்கமது_கைவிடேல்'' என்று ஆசிரியர் செல்வம் குறிப்பிட்டு இருந்தார். இப்பதிவு வைரலாகப் பரவியது.
கோடை விடுமுறையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பணிக்கு வர வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சஹானாவுக்கு மருத்துவம் படிக்க ஆசை என்றும், ஆனால் பண உதவி தேவை என்றும் தொலைபேசி எண்ணோடு ட்வீட்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து உதவிகளும் குவியத் தொடங்கின. சஹானா குறித்து கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன், அடுத்து என்ன படிக்க வேண்டுமானாலும் படிக்கட்டும். அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.
இதனால், அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சிவகார்த்திகேயனின் நல்ல உள்ளத்தைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஏழை மாணவி ஒருவரின் மருத்துவப் படிப்புக்கு உதவுவதாக உறுதியளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து இத்தேர்வானது கடந்த மாதம் 19-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19 ஆம் தேதியான இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்தலை முன்னிட்டு தேர்வு முடிவுகள் தாமதமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரமே முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்விலும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 5.07 சதவிகிதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் அளவில் அதிகம் தேர்ச்சியடைந்தவர்கள் என்ற ரீதியில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 95.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் கஜா புயலால் source link :பாதிக்கப்பட்ட பேராவூரணியில் மாணவி சஹானா 600 மதிப்பெண்ணுக்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் மேற்படிப்பு படிப்பு அவருக்கு வசதி இல்லாத காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.
இந்தச் செய்தியை அந்த மாணவியின் ஆசிரியரான செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், 'மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து, நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்,தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.இந்த செய்தி இயக்குநர் சரவணன் மூலம் நடிகர் சிவகார்திகேயனின் காதுக்கு எட்ட, அவர் மாணவியின் மருத்துவப்படிப்பிற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்.மேலும் மாணவியின் சாதனையை பாராட்டியுள்ள இயக்குநர் நவீன், 'வாழ்த்துகள் சஹானா. இந்த 524 மதிப்பெண், நகரங்களில் பெரும்பள்ளிகளில் பெருந்தொகை கட்டி, ஸ்பெஷல் டியூஷன்கள் வைத்து, இரவு அம்மாவின் காம்ப்லான் குடித்து படித்து பரிட்சை எழுதி எடுத்த பல 590களை விடவும் மேலானதே' என்று குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U