ஐன்ஸ்டீன் இல்லத்தில் ஆறு மாதம்! ஜெர்மனி பெலோஷிப் பெற விண்ணப்பிப்பது எப்படி? Click Here to download official PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 25, 2019

ஐன்ஸ்டீன் இல்லத்தில் ஆறு மாதம்! ஜெர்மனி பெலோஷிப் பெற விண்ணப்பிப்பது எப்படி? Click Here to download official PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பட்டப் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகளைத் தவிர்த்து தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் குறுகிய கால திட்டப் படிப்புகளைப் பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இது!
முக்கியத்துவம்: வித்தியாசமாக சிந்திக்கும் திறன் கொண்ட தகுதியான இளம் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஐன்ஸ்டைன் போரம்’, ‘டெய்ம்லர்’ மற்றும் ‘பென்ஸ் பவுண்டேஷன்’ இணைந்து ‘தி ஐன்ஸ்டீன் பெலோஷிப் 2020’ எனும் உதவித்தொகையை வழங்குகிறது. முன்பு செய்த ஆராய்ச்சியிலிருந்து வேறுபட்டு, பிற துறையில் புதிய ஆய்வு மேற்கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
துறைகள்:
 ஹுமானிட்டீஸ்
 சோஷியல் சயின்சஸ்
 நேச்சுரல் சயின்சஸ்
தகுதிகள்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளுள் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். 35 வயதை மிகாதவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆய்வு திட்டத்தை ஏற்கனவே நிறைவு செய்திருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் பிஎச்.டி., படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
உதவித்தொகைகள்: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் யூரோக்கள் உதவித்தொகையாக வழங்கப்படும். 6 மாதங்களுக்கு பிராண்டன்பர்க்கில் உள்ள ஐன்ஸ்டைனின் கோடை இல்லமான ‘கார்டன் காட்டேஜ் ஆப் ஐன்ஸ்டீன்’ல் தங்க அனுமதிக்கப்படுவர். மேலும் பயண செலவும் மாணவர்களுக்குத் திருப்பி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தங்களது ஆய்வு திட்டம் குறித்து விவரமாக எழுதப்பட்ட இரண்டு பக்க விரிவுரை, தன் விவரக் கடிதம் மற்றும் இரண்டு நபர்களிடமிருந்து பெற்ற சிபாரிசு கடிதம் ஆகியவற்றை இணைத்து, fellowship@einsteinforum.de எனும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 15
விபரங்களுக்கு: www.einsteinforum.de/fellowship
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews