இருளர் பழங்குடியின பெண்ணின் கல்விக்கு உதவிய கலெக்டர்: குவியும் பாராட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 01, 2019

இருளர் பழங்குடியின பெண்ணின் கல்விக்கு உதவிய கலெக்டர்: குவியும் பாராட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கடந்த 2013ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில், அவர்கள் கொத்தடிமைங்களாக வேலை பார்த்து வந்த செங்கல் சூளையிலிருந்து வருவாய்த் துறை மூலமாக மீட்கப்பட்ட்டுள்ளனர். கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவிக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி இலவச கல்வி பெற உதவி செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் காவனியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் சுகன்யா. இருளர் சமூகத்தைச் சேர்ந்த இவர் தன் பெற்றோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவர். முதலாவது மகன் சுரேஷ் மற்றும் இரண்டாவது மகள் சுதா இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகன் சுதாகரும் சுகன்யாவும் தினக் கூலி வேலைகள் செய்து தன் குடும்பத்துக்கு உதவி வந்துள்ளார். சுகன்யாவின் தந்தை சடையனுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு பணம் இல்லாமல் 5000 ரூபாய் பணத்துக்காக குடும்பமே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்துவந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில், அவர்கள் கொத்தடிமைங்களாக வேலை பார்த்து வந்த செங்கல் சூளையிலிருந்து வருவாய்த் துறை மூலமாக மீட்கப்பட்ட்டுள்ளனர். சொந்த கிராமத்துக்குத் திரும்பியதும் வந்தவாசி அமுடூர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்து, இறுதித் தேர்வில் 286 (500) மதிப்பெண்கள் பெற்றுள்ளார் சுகன்யா. பின் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியால் 12ஆம் வகுப்பை முடித்துள்ளார்.
மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பைத் தொடராமல் இருந்துள்ளார் சுகன்யா. இதனை அறிந்த திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, சுகன்யா மேற்படிப்பைத் தொடர உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சுகன்யா வந்தவாசி அருகில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், மூன்றாண்டுகள் நர்சிங் பட்டப் படிப்பை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அவருக்கு நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுகன்யா திங்கட்கிழமை தன் பெற்றோருடன் கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். கலெக்டர் கந்தசாமி சுகன்யாவுக்கு புதிய ஆடைகளும் இனிப்பும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கல்வி கற்கும் ஆர்வத்துடன் இருக்கும் சுகன்யாவுக்கு அவருக்கு உதவிய கலெக்டர் கந்தசாமிக்கும் பொதுமக்களின் பாராட்டு குவிகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews