`கல்வியில் மிகுந்த மக்கள்; வாக்களிப்பதில் குறைவாக இருக்கிறாங்களே!'- குமரி கலெக்டர் வேதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2019

`கல்வியில் மிகுந்த மக்கள்; வாக்களிப்பதில் குறைவாக இருக்கிறாங்களே!'- குமரி கலெக்டர் வேதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மாநிலத்தில், 74 சதவிகிதம் வாக்குப்பதிவு இருக்கும்போது, குமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் மிகக் குறைவாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் 68 சதவிகிதமும், சட்டசபைத் தேர்தலில் 66 சதவிகிதமும் வாக்குகள் பதிவானது என குமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னியாகுமரி தொகுதியில், 15 வேட்பாளர் ஒரு நோட்டா என மொத்தம் 16 பட்டன்கள் தேவைப்படும். அதற்கு, ஒரு ஓட்டிங் மெஷின் போதுமானது. ஓட்டிங் மெஷின்கள் அனுப்பும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் 3708 அரசியல் கட்சி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. வாகனச் சோதனையில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 64 லட்சம் ரூபாய், ஐ.டி விசாரணைக்குப் பிறகு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. இரண்டு இடங்களில், பெரிய அளவில் பறிமுதல்செய்யப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடியில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான முதல்கட்ட பயிற்சி முடிந்தது. நாளை இரண்டாம் கட்ட பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சிக்கு வராதவர்கள் மீது தேர்தல் ஆணைய விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் அனைத்துப் பணியாளர்களும் ஒத்துழைக்கிறார்கள். தேர்தல் பணிக்காக 8552 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழிப்புணர்வு வாசகத்தை ஆட்டோவில் ஓட்டும் குமரி கலெக்டர்

ஏப்ரல் 16-ம் தேதி மாலை 5 மணிவரை அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யலாம். ஏப்ரல் 18-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நம் மாநிலத்தில், 74 சதவிகிதம் வாக்குப்பதிவு இருக்கும்போது, குமரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் மிகக்குறைவாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் 68 சதவிகிதமும், சட்டசபைத் தேர்தலில் 66 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின. கல்வியில் மிகுந்த மாவட்ட மக்கள், வாக்களிப்பில் குறைவாக இருக்கிறார்கள். கன்னியாகுமரி தொகுதியில் மொத்தமுள்ள 1694 வாக்குச்சாவடிகளில், 591 வாக்குச்சாவடிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் பதிவானதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களிடம் தனியாக விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். நாங்கள் காத்திருக்கிறோம், வாக்காளர்கள் வாக்களிக்க வாருங்கள் என மக்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம்" என்றார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews