பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வியுடன் வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசுப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் வணிகவியல் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
"அரசுப் பள்ளிகளில் பயின்று 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று கணிதம் மற்றும் வணிகக் கணிதம் பாடத்தை பயின்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கல்விப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மேலும் 84380 02947 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ட்ஸ்ரீப்ஃட்ஸ்ரீப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சலிலும் சுய விவரக் குறிப்பை அனுப்பி கலந்து கொள்ளலாம். அதுமட்டுமன்றி 84483 86390, 84483 86392 என்ற எண்களில் மிஸ்டு கால் அளித்தால் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம் வரை ஊதியம்: இது தொடர்பாக ஹெச்.சி.எல். நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கூறியது: பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று கணக்கு மற்றும் வணிகக் கணிதம் பாடத்தில் ஏதாவது ஒன்றினை எடுத்து 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் ஒரு ஆண்டு பயிற்சிக்கு பின்னர் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் ஐ.டி. இன்ஜினியரிங் பிரிவில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும். மாணவர்களுக்குப் பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.
மாணவர்கள் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மூன்றாண்டு பணிபுரியும் போதே சாஸ்த்ரா பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி ஆகிய கல்வி நிறுவனங்களில் பிசிஏ, பி.எஸ்சி(ஐடி), எம்எஸ்சி போன்ற படிப்புகளையும் பயில முடியும். மாணவர்கள் முதலாமாண்டு பயிற்சியில் சேரும்போது, எந்தவிதமான கல்விக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. இந்தப் பயிற்சிக்கான கல்விக் கட்டணமான ரூ.2 லட்சம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்துத் தரப்படும். மாணவர்கள் பணியில் சேர்ந்த பின்னர் ஐந்து ஆண்டிற்குள் இந்த கட்டணத்தைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. பணிபுரியும் போதே பட்டப் படிப்பினை முடித்து விடுவதால் பட்டம் பெறவில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. இந்த வாய்ப்பினை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews