CPS ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு இல்லாமல் அவதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 22, 2024

Comments:0

CPS ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு இல்லாமல் அவதி!

CPS ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு இல்லாமல் அவதி!



தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக் கும் மருத்துவக்காப்பிட்டுதிட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர் களது பென்ஷனில் இருந்து மாதம்தோறும் ரூ. 495 பிடித்தம் செய்யப்படுகிறது. இதன்மூலம், பென்ஷன்தாரர் அல்லது அவரது வாழ்க்கை துணை ஆகியோரின் மருத்துவ செலவுகளுக்கு ரூ.5 லட்சம் வரையும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில நோய்களுக்கு ரூ. 10 லட்சம் வரை யும் அனுமதிக்கப்படுகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருக் கின்றன. அதாவது, எந்த சிகிச் சையாக இருந்தாலும் அதிகபட்சம் 50 சதவீதத்துக்கு மேல் மருத்துவக் காப்பீடு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. புதிய பென்ஷன் திட்டம் இது ஒருபுறம் இருக்க, புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர பென்ஷன் கிடையாது. எனவே அவர்களுக்கான மருத்துவக் காப் பீட்டுத்திட்டத்தை செயல்படுத்து வதில் சில பிரச்னைகள் உள்ளன. இதற்கிடையில் புதிய பென் ஷன் திட்டத்தில் ஓய்வு பெறுப வர்களும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயன்பெறும் வகை யில் 2022ம் ஆண்டு கருவூல கணக்குத்துறை அறிவித்தது. அதா வது, பழைய பென்ஷன் இட்ட பென்ஷன்தாரர்களின் மாதாந்திர பென்ஷனில் இருந்து கருவூலக் கணக்குத்துறையே மாதம்தோறும் ரூ.495 பிடித்தம் செய்கிறது. ஆனால் புதிய பென்ஷன் திட்டத்தில் பயன்பெறுபவர் களுக்கு அந்த வழிமுறை இல்லா ததால், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரு ஆண்டுக்கான முழு தொகையை யும் யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ் கம்பெனியிடம் நேரடி யாக கட்ட வேண்டும் என்று 2022ல் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இன்று வரை இது செயல்பாட்டுக்கு வரவில்லை. இது குறித்து சிபிஎஸ் (புதிய பென்ஷன் திட்டம்) ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங் கிணைப்பாளர் பிரெடெரிங் எங்கெல்ஸ் கூறியது: புதிய பென்டின் தமிழகத்தில் திட்டம் 2008 ஏப்ரல் 1 1ல் அறிமு கப்படுத்தப்பட்டது றைய நிலவரப்படி யர்கள், ஆசிரியர்கள் 6.14 லட்சம் . இதில் இன் அரசு ஊழி என சுமார் பேர் பணியாற்றி வருகின்றனர். இது ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் இது 80 சத வீதம். பழைய பென்ஷன் இட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகி றோம். புதிய பென்ஷன் திட்டத்மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப் பதை தொடர்ந்து பல ஆண்டுக ளாவே வலியுறுத்தி வருகிறோம். இந்நிலையில் புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வு பெறுபவர் களுக்கும் மருத்துவக் காப்பிட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கருவூலக் கணக்குத்துறை 2022ல் அறிவித்தது. ஆனால் அதை செயல்படுத்துவது தொடர் பாக முறையான எந்த செயல் முறையும் வகுக்கப்படவில்லை. 40 ஆயிரம் பேர் தவிப்பு

தமிழகத்தில் கடந்த மே 31 நிலவரப்படி புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் 38 ஆயிரத்து 175 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இன் றைய நிலவரப்படி அது 40 ஆயி ரத்தை கடந்திருக்கும். இவர்கள் மருத்துவக் காப்பீட்டு திட்டம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். காப்பீட்டுத் தொகையை இன் சூரன்ஸ் நிறுவனத்திடம் கட்ட வேண்டும் என்று கருவூலத்துறை கூறுகிறது. ஆனால் அது தொடர் பாகமுறையான செயல்முறைகள் இல்லாததால் இன்சூரன்ஸ் நிறு வனத்திடம் காப்பீட்டுத் தொகை செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, முறையான செயல் முறைகளை வகுத்து, அந்தந்த மாவட்ட கருவூலங்கள் அல்லது தாலுகா அளவில் உள்ள சார் கரு வூலங்கள் மூலம் காப்பீட்டுத் தொகையை செலுத்த அரசு முறை யான அறிவிப்பை வெளியிட வேண்டும். இதன் மூலம் புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வு பெறுபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews