2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 10 MBA கல்வி நிறுவனங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 10, 2019

2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 10 MBA கல்வி நிறுவனங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தி நேஷனல் இன்ஸ்டிட்டியூஷனல் ரேங்கிங் ஃப்ரேம் வொர்க் அதாவது சுருக்கமாகச் சொல்வதென்றால் NIRF தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தியாவில் இருக்கும் டாப் 20 MBA கல்லூரிகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். கடந்த நான்கு ஆண்டுகளாக நடமுறையில் இருக்கும் இந்த வழக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் கல்லூரிகள் எவையெவை என இப்போது தெரிந்து கொள்வோம்.
நேற்று புது தில்லியில் இந்தப் பட்டியலை வெளியிட்டுச் சிறப்பித்திருப்பது நமது இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள். தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல்லது B ஸ்கூல் வகைப்பிரிவின் கீழ் IIM அகமதாபாத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்றிருக்கிறது IIM பெங்களூரு. கடந்த ஆண்டு டாப் டென் MBA கல்லூரிகள் லிஸ்டில் 10 ல் 4 இடங்களை B ஸ்கூல் வகைப்பிரிவு கல்லூரிகளான IIM கல்லூரிகள் வென்றிருந்தன. இம்முறை எண்ணிக்கையில் மேலும் 2 கூடி டாப் 10 ல் 6 கல்லூரிகள் B ஸ்கூல் வகைப்பிரிவைச் சேர்ந்த IIM கல்லூரிகளாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில் சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட் கல்லூரி கடந்தமுறை பெற்றிருந்த 10 ஆம் இடத்திலிருந்து இந்தாண்டு 7 ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. IIM இந்தூர் கடந்தாண்டு NIRF பட்டியலில் இடம்பெறா விட்டாலும் இந்தாண்டு நேரடியாக NIRF பட்டியலில் 5 ஆம் இடத்தை வென்றிருக்கிறது.
NIRF தர வரிசைப் பட்டியலின் கீழ் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், இதர கல்லூரிகள், தனியாரி கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கட்டடக்கலை பயிற்றுவிக்கும் கல்லூரிகள் உள்ளிட்ட மொத்தம் 9 பிரிவுகளின் கீழான கல்லூரிகள் வகைப்படுத்தப்பட்டு அவற்றிலிருந்து சிறந்த கல்லூரிகள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த அடிப்படையில் NIRF பட்டியலில் IIT மெட்ராஸ் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகத் தேர்வாகியிருப்பது பெருமைக்குரியது.
NIRF தரவரிசை அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த B-ஸ்கூல் கல்லூரிகளின் பட்டியல்: 1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) பெங்களூரு
2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) அகமதாபாத்
3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கொல்கத்தா
4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) லக்னெள
5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) இந்தூர்
6. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கராக்பூர்
7. சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்
8. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கோழிக்கோடு
9. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) தில்லி
10. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) மும்பை
NIRF தரவரிசை அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த B-ஸ்கூல் கல்லூரிகளின் பட்டியல்: 1. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) அகமதாபாத்
2. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) பெங்களூரு
3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கொல்கத்தா
4. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) லக்னெள
5. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) மும்பை
6.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கோழிக்கோடு
7. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (IIM) கராக்பூர்
8. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) தில்லி
9. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (IIT) ரூர்கி
10. சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான மேற்கண்ட தரவரிசைப் பட்டியலில் கடந்தாண்டு இடம்பெற்ற ரூர்கி இந்தாண்டு பட்டியலில் டாப் 10 ல் இடம்பெறவில்லை. அதே போல கடந்தாண்டு பட்டியலில் இடம்பெறாத இந்தூர் IIM இந்தாண்டு டாப் 10 ல் இடம்பெற்றுள்ளது. மற்றப்டி தரவரிசையில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews