பேஸ்புக், வாட்ஸ் ஆப்பிற்கு அடிமை ஆகக்கூடாது, மாணவர்களுக்கு அட்வைஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 05, 2019

பேஸ்புக், வாட்ஸ் ஆப்பிற்கு அடிமை ஆகக்கூடாது, மாணவர்களுக்கு அட்வைஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மாணவர்கள் டிஜிட்டல் பிளாட்பார்மிற்கு அடிமை ஆகாமல், வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என ஐ.ஜி., (பயிற்சி) சாரங்கன் பேசினார். கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் (பயிற்சி) சாரங்கன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக முன்னாள் கூடுதல் இயக்குனர் சம்பந்தம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். பெங்களூரு அக்சன்சர் நிறுவன துணைத்தலைவர் மதன்குமார் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சாரங்கன் பேசுகையில், &'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட டிஜிட்டல் பிளாட்பார்ம்களை மாணவர்கள் தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திட வேண்டும். அதற்கு அடிமை ஆகி விடக்கூடாது. இண்டர்நெட்டில் உள்ள வாய்ப்புகளை வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்லுாரி காலங்களில், எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க வேண்டும். கல்வி கற்பது மட்டும் போதாது. வெளியுலக அறிவினையும் வளர்க்க வேண்டும். பெற்றோர்களின் அறிவுரை, முதியவர்களின் அனுபவம், உங்களின் அறிவு ஆகியவற்றை பயன்படுத்தி வாழ்க்கையை சீரமைக்க வேண்டும்.
எதிர்காலத்தை திட்டமிட்டு அதற்காக தினமும் சிறிது நேரம் உழைக்க வேண்டும்&' என்றார்.கல்லுாரி அளவில் சாதனை படைத்த மாணவர்கள், சாதனைக்கு உதவிய அவர்களின் பெற்றோர்களுக்கு, உஷா சாரங்கன் பரிசு வழங்கினார். சிறப்பு விருந்தினர் பாபுராம், கல்லுாரி தலைவர் மகுடமுடி, தாளாளர் குமார், செயலர் கோவிந்தராஜு உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews