``நீர், கல்வி, சுற்றுச்சூழல்!" - அஸ்ஸாம் மாணவிகள் தயாரித்த `செம' தேர்தல் அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 30, 2019

``நீர், கல்வி, சுற்றுச்சூழல்!" - அஸ்ஸாம் மாணவிகள் தயாரித்த `செம' தேர்தல் அறிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அங்கு அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளைவிட வெள்ள பாதிப்பே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கின்றனர் குழந்தைகள். ஏனென்றால் வெள்ள பாதிப்பு ஏற்படும் காலங்களில் மிக நீண்ட நாள்களுக்குப் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வெள்ள பாதிப்பு காலங்களில் பள்ளிகளும் பள்ளிகளாக இருப்பதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடக்கூடியவை. மீதமுள்ள பள்ளிகளும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுவிடும். இதனால் குழந்தைகளில் கல்வியானது வெள்ள காலங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
``நீர், கல்வி, சுற்றுச்சூழல்! இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலின் ஆரவாரங்கள் ஆரம்பித்துவிட்டன. ஒவ்வொரு கட்சியும் முந்திக்கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிடுவதும், வேட்பாளர்களை அறிவிப்பதுமாக ரொம்ப பிஸியாக தேர்தல் வேலைகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.கவும் இதுவரை தேர்தல் அறிக்கைகளை வெளியிடவில்லை. ஒவ்வொரு தேர்தலைப் பொறுத்தவரையிலும் மக்களின் மனநிலையை வாக்குகளாக மாற்றுவதில் தேர்தல் அறிக்கைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதனால்தான் பலரும் தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எதிர்நோக்கி உள்ளனர். ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னதாகவே அஸ்ஸாம் மாநிலத்தின் குழந்தைகள், மாணவர்கள் மட்டும் அடங்கிய 500 பேர் கொண்ட குழு தேர்தல் அறிக்கையை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இதனை அவர்கள் குழந்தைகளின் அறிக்கை என அழைக்கின்றனர். அந்த அறிக்கை முக்கியமாக அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளை அலசுகிறது.
பிரதான கட்சிகளெல்லாம் தங்களது தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் தொடர்பான தொலைநோக்குடைய வாக்குறுதிகளையோ அல்லது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகளையோ கொடுப்பதில்லை. ஆனால், இந்தக் குழந்தைகளின் தேர்தல் அறிக்கையில் ஆரோக்கியமான வாழ்வு, சுகாதாரம், நீர், கல்வி, சுற்றுச்சூழல், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு எனப் பல்வேறு வகையான கோரிக்கைகளும் வாக்குறுதிகளாக அமைந்துள்ளன. தேர்தல் அறிக்கையை வடிவமைத்த 500 பேரும் 14 - 19 வயதுடையவர்களே. அவர்கள் அனைவருமே மாணவிகள். அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் 21 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய அஸ்ஸாம் மற்றும் இளம்பருவ மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்பு (Assam and the Adolescent and Children Rights Network, Assam (ACRNA)) மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகிய அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகக் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளனர். அவற்றில் மிக முக்கியமானது அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பைச் சமாளிக்கக்கூடிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவது. அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாநிலங்களில் அஸ்ஸாமும் ஒன்று. அங்கு அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளைவிட வெள்ளப் பாதிப்பே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கின்றனர் குழந்தைகள். ஏனென்றால் வெள்ள பாதிப்பு ஏற்படும் காலங்களில் மிக நீண்ட நாள்களுக்குப் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வெள்ள பாதிப்பு காலங்களில் பள்ளிகளும் பள்ளிகளாக இருப்பதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடக்கூடியவை. மீதமுள்ள பள்ளிகளும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுவிடும். இதனால் குழந்தைகளில் கல்வியானது வெள்ள காலங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது. அஸ்ஸாம் மாணவிகள் தேர்தல் அறிக்கை:
``அந்தந்தப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் எல்லாம் முடிந்து இயல்புநிலைக்குத் திரும்பினாலும் கல்வி ஆண்டில் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரிக்கும். வெள்ளத்திற்குப் பின்பு ஒவ்வொரு குழந்தையின் குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது, இடம்பெயர்வது எனப் பல காரணங்களுக்காக இடைநிற்றல் நிகழ்கிறது. பள்ளியிலிருந்து இடைநிற்றல் என்பது குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்கள் இன்னும் சில நேரங்களில் குழந்தைக் கடத்தல் வரை பரிமாணம் அடைகிறது" என அஸ்ஸாம் மற்றும் இளம்பருவ மற்றும் குழந்தைகள் உரிமை அமைப்பைச் சேர்ந்த சிரஞ்சிப் ககோடி (Chiranjib Kakoty) கூறுகிறார். ``பள்ளி இடைநிற்றல் பிரச்னையை இயற்கைப் பேரிடர்களுடன் பெரிதாகத் தொடர்படுத்துவதில்லை. பெரும்பாலும் வறுமை, சமூக விழிப்புணர்வு போன்றவற்றின் வழியேதான் இதனை அணுகுகின்றனர். ஆனால் பேரிடர்களின் விளைவுகளில் ஒன்றாகவும் இவை நிகழ்கின்றன என்ற நோக்கிலும் ஆராய வேண்டும். முக்கியமாக வெள்ள பாதிப்பு பிரதேசங்களில் பள்ளி இடைநிற்றலின் எண்ணிக்கை இதனால்தான் அதிகரிக்கின்றன" என்கிறார் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகப்(Azim Premji University) பேராசிரியர் சஸ்வதி பாய்க் (Saswati Paik). அஸ்ஸாமில் 1 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் முறையாகப் பள்ளிப் படிப்பைக் கூட பெறவில்லை என்கிறது ஓர் ஆய்வு. இதை இங்கே பொருத்திப் பார்த்தால் சரியாக இருக்கும்.
இயற்கைப் பேரிடர்காலங்களில் பள்ளிகளுக்கான பாதுகாப்பு மேலாண்மை என்பது புதிய முயற்சிகள் கிடையாது. பல்வேறு நாடுகளில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்னைகளைப் பெரிய அளவில் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். மேலும், அந்த அறிக்கையில் அடிக்கடி பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்குச் சென்று சேர்ந்துள்ள அரசின் சேவைகள் குறித்தும் வளர்ச்சி மேலாண்மைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் 13 மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் அஸ்ஸாமைத் தாக்கியுள்ளன. 3093 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. 171 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 650 பள்ளிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. தெற்காசிய நாடுகளில் பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பெரும்பாலும் பள்ளிகளையே பாதிக்கின்றது என்கிறார் பேரிடர் மேலாண்மை நிபுணர் இந்திரஜித் பால் (Indrajit Pal). அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் புவியியலின்படி 85% இடங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாகவே இருக்கின்றன என்கிறார் இந்திரஜித்.
அஸ்ஸாம் வெள்ளம் வேகமான நகரமயமாக்கல் மற்றும் மிகப்பெரிய நகரங்களின் முறையற்ற வளர்ச்சி என அந்தந்தப் பகுதிகளில் கடந்த பத்து ஆண்டுகளில் வெள்ளத்தால் ஏற்படும் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் காலநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் அதீதமான காலநிலையுமே என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே அஸ்ஸாமில்தான் அதிகமாக உள்ளது. மேலும், பாலியல் வன்முறை உட்பட பல்வேறு பிரச்னைகளையும் குழந்தைகள் தாங்கள் தயாரித்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். வெள்ளத்தினால் மாணவர்களின் பள்ளி இடைநிற்றலும் கல்வித் தடையும் அதிகமாவது குறித்துப் பேசியிருப்பது யாரும் பேசாத ஆனால் அதே நேரத்தில் முக்கியமான பிரச்னை தங்களது தேர்தல் அறிக்கையை பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் அஸ்ஸாம் கான பரிஷித் உட்பட அஸ்ஸாமின் பிரதானமான ஐந்து கட்சிகளுக்குக் கொடுக்கவும் செய்துள்ளனர். தேசிய அளவில் மிக முக்கியமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews