👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459

துரையரசன் மூன்றாமாண்டு செல்லவிருக்கும் மருத்துவ மாணவர் ஆவார். புதுக்கோட்டை மாவட்டம், வணக்கங்காடு கிராமத்தைச் சேர்ந்த துரையரசன் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த கடைசிப் பிள்ளை ஆவார், இவருக்கு நான்கு அக்காக்கள். பன்னிரண்டாம் வகுப்பில் 95% (1151/1200) மதிப்பெண் எடுத்து அசத்திய துறையரசனுக்கு மருத்துவ படிப்பின்மேல் கொள்ளை விருப்பம், இருப்பினும் ஒரு சில மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வாய்ப்பைத் தவறவிட்ட துரைக்கு கவுன்சலிங் மூலம் காஞ்சிபுரம் அன்னை மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்க, தன் குடும்பத்தின் சக்திக்கும் மீறி வருடம் 3.50 லட்சம் கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.
நன்றாக படிக்கும் மாணவர் என்பதால் துறைக்கு முதலாமாண்டு கல்விக் கடனும், கல்வி உதவித் தொகையும் கிடைத்தது, இருந்தாலும் பிரச்னை வேறு விதமாக துரையை அடித்தது. 2017-ல் துரையின் முதல் வருட படிப்பு முடிந்தபோது, விதிமீறலுக்காக அன்னை மருத்துவக் கல்லூரியை மூட உத்தரவிட்டது இந்திய மருத்துவக் கழகம். எந்தத் தவறும் செய்யாத மாணவர்கள் படிப்பை பாதியிலேயே இழந்து பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் மாணவர்கள். இறுதியாக பாதிக்கப்பட்ட 144 மாணவர்களை அரசுக் கல்லூரிகளில் மாற்றக்கோரி உத்தரவிட்டது நீதிமன்றம்.
மாணவர்கள் அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டாலும் தனியார் கல்லூரியில் கட்டிய அதே கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட பின்னரும் துரையரசன் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்