பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

பேராசிரியர்கள் நியமன முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் மதுரையில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. மேலும் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் சிலர் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்குரிய கல்வித் தகுதியைப் பெறவில்லை எனவும், சுமார் ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு வக்பு வாரிய நிர்வாகிகள் அவர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சையத் அலி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ள வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர், சென்னையில் உள்ள வக்பு வாரியத்தின் தலைமை அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா அலுவலகத்தில் இருந்ததாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது. மேலும் சோதனையில் முறைகேடு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க கோரி வக்பு வாரிய நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பேராசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews