கேட்டரிங் படிப்பை நம்பி படிக்கலாம்: பேராசிரியர் சுரேஷ்குமார் பேச்சு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

கேட்டரிங் படிப்பை நம்பி படிக்கலாம்: பேராசிரியர் சுரேஷ்குமார் பேச்சு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
வேலை வாய்ப்பு அதிகமுள்ள கேட்டரிங் படிப்பினை நம்பி படிக்காலம் என பேராசிரியர் சுரேஷ்குமார் பேசினார்.தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார் பேசியதவாது;தொழில் சார்ந்த படிப்புகள் தான் தற்போது உடனடியாக வேலை வாய்ப்பு அளிக்கிறது. குறிப்பாக கேட்டரிங் முடித்தவர்கள் இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் பணிபுரிந்து நல்ல சம்பளம் பெறுகின்றனர். கேட்டரிங்கில் உணவு தயாரிப்பு, உணவு பரிமாறுதல், ஹவுஸ் கீப்பிங் போன்ற 5 வகையான படிப்புகள் உள்ளது.மூன்று ஆண்டுகள் படித்தால் போதும். எளிதில் உடனடியாக வேலை வாங்கி விட முடியும். கேட்டரிங் படிப்பு முற்றிலும் வித்தியாசமானது.
இந்த படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 90 சதவீதம் செய்முறையும், 10 சதவீதம் &'தியரியும்&' உள்ளதால் சுலபமாக படித்து விட்டு வர முடியும். வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நல்ல கல்லுாரியை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். இந்த படிப்பு முடித்த பிறகு கப்பல்களில் பணிபுரிய முடியும். ஆனால் பாஸ்போர்ட், எஸ்.டி.சி.டபுள்யூ, சி.டி.சி., சான்றிதழ் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த சான்றிதழ்களை அளிக்கும் நிறுவனங்களில் மட்டுமே இந்த படிப்புகளில் சேரமுடியும். கேட்டரிங் முடித்த மாணவர்கள் கப்பல்களில் ஒரு லட்சம் வரை சம்பளம் பெற முடியும். வேலை வாய்ப்பு அதிகமுள்ள கேட்டரிங் படிப்பினை நம்பி படிக்கலாம்.இவ்வாறு சுரேஷ்குமார் பேசினார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews