`பள்ளிகளின் அருகே விற்கப்படும் போதை மிட்டாய்கள்...' பெற்றோருக்கு எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 28, 2019

`பள்ளிகளின் அருகே விற்கப்படும் போதை மிட்டாய்கள்...' பெற்றோருக்கு எச்சரிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பள்ளி மாணவர்கள் புகையிலை பயன்படுத்துவதைக் கண்டறியும்நோக்கில் `கன்ஸ்யூமர் வாய்ஸ்' என்ற அமைப்பின் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நுகர்வோர் நலனுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இந்தியாவின் ஆறு மாநிலங்களில் 20 நகரங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில், `பள்ளியிலிருந்து 300 அடி தூரம்வரை புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது' என்ற சட்டம் பெரும்பாலான இடங்களில் மீறப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆய்வு நடத்தப்பட்ட 487 பள்ளிகளின் அருகில் 225 இடங்களில் சிகரெட், புகையிலைப் பொருள்கள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் பெரும்பாலும் தெருவோரக் கடைகளில் 56.6 சதவிகிதம் சிகரெட், புகையிலைப் பொருள்கள் மட்டுமே விற்கப்படுவது தெரியவந்தது. மொத்தமாக பாக்கெட்டுகளாக விற்பனையாவதைக் காட்டிலும் தனித்தனி சிகரெட்டுகள்தான் அதிக அளவில் விற்பனையாகின்றன. மொத்த சிகரெட் விற்பனையில் தனித்தனி சிகரெட் விற்பனை மட்டும் 90.9 சதவிகிதமாகும்.
தமிழகத்தில் சென்னை, கோவை, புதுக்கோட்டை ஆகிய மூன்று நகரங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. 34 பள்ளிகளின் அருகே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், புகையிலை விற்கப்படும் மொத்த கடைகளில் 88 சதவிகித கடைகளில் சிப்ஸ், மிட்டாய் போன்று பள்ளி மாணவர்களைக் கவரும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் புகையிலை பயன்பாடு குறித்த அந்த ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குழந்தைகள் உரிமை ஆணையத் தலைவர் எம்.பி.நிர்மலா பேசினார். அப்போது அவர், ``சீனாவுடன் எல்லா விஷயத்திலும் போட்டிபோடுவதுபோன்று புகையிலைப் பயன்பாட்டிலும் இந்தியா போட்டிபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆம்... புகையிலைப் பயன்பாட்டில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளன.
புகையிலைச் செடிகள் தரமில்லாத மண்ணிலும் வளரக்கூடியவை. புகையிலை அதிக அளவுக்குப் பயிரிட இதுவும் ஒரு காரணம். முதன்முதலில் புகையிலை, மருந்து தயாரிக்கவே பயன்படுத்தப்பட்டது. கிராமங்களில் பல் வலி மற்றும் காது வலிக்காகப் புகையிலை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. பெரியவர்கள் காது குத்தும்போது அந்த இடத்தில் துளை அடைந்துவிடாமலிருக்கப் புகையிலையை வைப்பார்கள். இப்படி மருந்தாகப் பயன்பட்ட புகையிலை இப்போது உயிர்களைக் கொன்றுவருகிறது. மெல்லும் வகை புகையிலை ஏழை எளிய மக்கள் வாழும் இடங்களில்தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழைகள் இந்த வகைப் புகையிலைகளுக்கு இலக்காக நிர்ணயிக்கப்படுகின்றனர். பள்ளிகளின் அருகே புகையிலை, கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதைத் தடுக்க வேண்டும். பள்ளிகளின் அருகே புகையிலை, போதைப்பொருள்கள் விற்கப்படுவதுபற்றி அறிந்துகொள்ளும்விதமாக ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
அவன் கூறிய தகவல் அதிர்ச்சியளித்தது. `ஸ்கூல் பக்கத்துல குட்டித் தலையணை மாதிரி ஒரு மிட்டாய் விப்பாங்க. அதை வாங்கி வாயில் போட்டா டீச்சர் அடிச்சாலும் வலிக்காது, திட்டினாலும் எதுவும் தெரியாது' என்று மிகச் சாதாரணமாகச் சொன்னான். கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் அடங்கிய மிட்டாய்கள் பள்ளிகளின் அருகே தாராளமாக விற்கப்படுவதையே இது காட்டுகிறது. இதுபோன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி புகையிலை, போதைப்பொருள்களுக்குத் தடைவிதிக்க வேண்டும்'' என்றார் அவர். பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஏ.சோமசுந்தரம் பேசும்போது, ``புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் சாக்லேட், மிட்டாய்கள் போன்று சிறுவர்களைக் கவரும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவையும் சிறுவர்களை மறைமுகமாகப் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்கும். எனவே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படும் கடைகளில் தின்பண்டங்கள் விற்பதற்குத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருகிறோம்'' என்றார் அவர். தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ஏ.ராமகிருஷ்ணன், ``அண்மையில் 1,22,000 கிலோ தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தோம். தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்ததற்காக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், ஐந்து வழக்குகளில் குற்றவாளிகளிடமிருந்து மொத்தம் ரூ.1.8 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனைபற்றி 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்'' என்றார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews