👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகம் முழுவதும் ஆயிரம் கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரத்து 896 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளதால், இவற்றில் முதற்கட்டமாக ஆயிரம் பணியிடங்களை ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு நிரப்பலாம் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து தொகுப்பூதியமாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி புதிய பணி நியமங்களுக்கான தேர்வுகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. ஆனால் அதிகளவிலான நபர்களை தேர்வு செய்யாப்படாத சூழல் உள்ளது. இதையடுத்து ஓராண்டு அல்லது டிஎன்பிஎஸ்சி புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளும் வரை தற்காலிக விஏஓக்கள் பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதிமுக தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஊராட்சி அளவிலான பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்க விடுத்தார். இந்நிலையில், தமிழக அரசு ஆயிரம் கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எவ்வாறு பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடவில்லை என கூறப்படுகிறது. மீதமுள்ள 1,896 பணியிடங்களை நிரப்ப அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. தற்காலிக கிராம நிர்வாக அதிகாரிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்