அறிவியல் உலகம்!: அழியும் நிலையிலுள்ள உலகின் மிகப் பெரிய தேனீ இனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 27, 2019

அறிவியல் உலகம்!: அழியும் நிலையிலுள்ள உலகின் மிகப் பெரிய தேனீ இனம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அறிவியல் உலகில் அழிந்துவிட்டதாக பல காலமாகக் கருதப்பட்டுவந்த ராட்சத தேனீயை, இந்தோனேஷிய தீவு ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர் வனவிலங்கு நிபுணர்கள். வாலேஸ் ராட்சத தேனீ என அறியப்படும் இந்த தேனீ கை கட்டைவிரல் அளவு தடிமனுடையது. வாலேஸின் மாதிரியைக் கண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று, இந்தோனேஷியாவின் மூன்று தீவுகளில் ஜனவரி மாதம் ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்தது. சில நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ராட்சதப் பெண்தேனீயைக் கண்டுபிடித்துள்ளனர்.
வாலேஸ் ராட்சத தேனீக்கள் அழிந்துபோகலாம் என்கிற உயிரினங்களின் பட்டியலில் இருப்பதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச மாநாட்டு அமைப்பு தெரிவிக்கிறது. அதனை தொடர்ந்து உலக அளவில் அழிந்துபோன இனங்கள் பற்றிய ஆய்வைத் தொடங்கியுள்ள உலக வன உயிரினங்களின் பாதுகாப்பு என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு இந்த ராட்சதத் தேனீயைக் கண்டுப்பிடிப்பதற்கான பயணத்திற்கு நிதி ஆதரவு வழங்கியது. “இந்த கண்டுபிடிப்பு இந்த ராட்சதப் பூச்சி பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் இதனை அழிவிலிருந்து காக்கவும் ஆய்வுகளைத் தூண்டும்” என்கிறார் இந்தப் பயணத்தில் பங்கு கொண்ட உறுப்பினரும், தேனீ நிபுணருமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பூச்சியியல் நிபுணர் இலி விமான்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews