மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்திடம் சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை: AICTE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 25, 2019

மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்திடம் சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை: AICTE

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இன்ஜினியரிங் மாணவர்கள், ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களிடம் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏஐசிடிஇ தலைவர் அனில் டி. சகஸ்கரபுதே கூறினார் ஓய்வு பெற்ற இன்ஜினியரிங் பேராசிரியர் பி.சி.சந்திரசேகரனின் ‘‘மாடர்ன் சயின்டிபிக் தாட்’’ என்னும் நூல் வெளியீட்டு விழா கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இந்த புத்தகத்தை ஏஐசிடிஇ(அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில்) தலைவர் அனில் டி.சகஸ்கரபுதே வெளியிட்டார்
இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, ஐஐடி சென்னை முன்னாள் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணன், புத்தக ஆசிரியர் பி.சி.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். புத்தக வெளியிட்டுக்கு பின் ஏஐசிடிஇ தலைவர் கூறியதாவது இன்ஜினியரிங் மாணவர்களை வழிநடத்துவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்குகுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் 50க்கும் அதிகமான கருத்தரங்குகள்நடத்தப்பட்டு வருகிறது வரும் கல்வியாண்டில் 100 கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுளோம். இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படுவதில் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை
ஒரு இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கலை கல்லூரி நடத்த தேவையான இடம் மீதமிருந்தால் எந்த இன்ஜினியரிங் கல்லூரி நிர்வாகமும் கலைக்கல்லூரி நடத்தலாம் ஓய்வு பெற்ற 200 பேராசிரியர்கள் தேர்வு செய்து வைத்து உள்ளோம். இவர்களை அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். இவர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடுவார்கள் இதன்மூலமாக, வரும் ஆண்டுகளில் இன்ஜினியரிங் கல்வி மேம்படுத்தப்படும். தொழில்நுட்க கல்வியை பொறுத்தவரை ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கல்வி சான்றிதழை குறிப்பிட்ட கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை சான்றிதழ் சரிபார்ப்புக்காக வழங்கிவிட்டு பெற்றுக்கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழகம் மூலம் குறிப்பிட்ட கல்வி நிறுவனம் மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வித்தகுதியை அறிந்துகொள்ளலாம். இவ்வாறு ஏஐசிடிஇ தலைவர் அனில் டி. சகஸ்கரபுதே கூறினார்
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews